தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவ பினாங்கு அரசு முன்வந்தது

ramasamyபத்து கவான் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு “ஒரு நல்ல தீர்வை”ப் பெற்றுத்தரும் முயற்சியில் பினாங்கு அரசு ஈடுபட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என ஆகஸ்ட் நடுப்பகுதியில் அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர்  II பி.இராமசாமி கூறினார். ஆனாலும், அறிவிக்கை அனுப்பிய பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் (பிடிசி) பேச்சு நடத்தி வருவதாக அவர் சொன்னார்.

அந்தத் தோட்டத்தில் இருந்த 63 குடும்பங்களில் 53 இழப்பீடு பெற்று ஏற்கனவே வெளியேறி விட்டன.

“எஞ்சியுள்ள 10 குடும்பங்களும் அத்தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் அல்லர் என்பதுதான் பிரச்னை. இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவுவோம்”, என்றாரவர்.