இன்னும் என்னவெல்லாமோ விலை உயரப் போகிறது

petrolஉங்கள் கருத்து  ‘ஏற்கனவே பலவித விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இது வேறு. பெட்ரோல் விலை உயர்வு எல்லா சேவைகளையும் பொருள்களையும் பாதிக்கும் என்பதால் எல்லாமே விலை உயரப் போகிறது’

டீசல் ரோன்95 20 சென் உயர்ந்தது

ஸ்விபெண்டர்: 1மலேசியா பிரதமர் கூறுகிறார், பிஆர்ஐஎம்(பந்துவான் ரக்யாட் 1மலேசியா) இருப்பதால்  20சென் விலை உயர்வால் பாதிப்பில்லையாம். அப்படிங்களா, உண்மையா அது?

ஏற்கனவே, ரிங்கிட் மதிப்புக் குறைந்து பணவீக்கத்தின் தாக்கத்தால் தலைசுற்றுகிறது. அப்புறம், ஜிஎஸ்டி (பொருள், சேவை வரி) ஒரு பக்கம் பயம் காட்டுகிறது. விரைவில் மின் கட்டணம் உயரும் என்றும் தெரிகிறது.

வாழ்க்கை படுசிரமமாக இருக்கப் போகிறது

சக மலேசியன்: இப்போதிருப்பதைவிட பிப்ரவரி மாதம் கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருந்தது. அப்போது அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்தவில்லை.

இப்போது விலையை உயத்தியது பொதுத் தேர்தலில் பிஎன்னைத் தேர்ந்தெடுக்காத மக்களைத் தண்டிப்பதுபோல் இருக்கிறது. அதுவும், நகர்புற மக்களுக்கு கார் என்பது இன்றியமையாத பொருளாகிவிட்டது.

எப்போதும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை என்பதெல்லாம் ஏமாற்று வேலை.

விழித்துக்கொண்டவன்: உதவித் தொகையை நம்பி இருக்கும் போக்கு ஒழிய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேபோல் பிஎன் ஏபி(அங்கீகரிக்கப்பட்ட பெர்மிட்) கொடுப்பதை நிறுத்த வேண்டும், கார்களுக்கு விதிக்கப்படும் வரியையும் குறைக்க வேண்டும்.

எல்லா பெரிய நகரங்களிலும் செம்மையான பொதுப் போக்குவரத்தை உருவாக்கப்போவதாக சொன்னதை பிஎன் அரசு நிறைவேற்றவில்லை. பொதுப்போக்குவரத்து சீராக இல்லாத காரணத்தால் கார் வைத்துக்கொள்வது அவசியமாகி விட்டது.

கார் விலை உயர்வாக இருப்பது மக்களுக்கு சுமையாக உள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

சித்ரா: ஏற்கனவே பலவித விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இது வேறு. பெட்ரோல் விலை உயர்வு எல்லா சேவைகளையும் பொருள்களையும் பாதிக்கும் என்பதால் எல்லாமே விலை உயரப் போகிறது. பிஆர்1எம் உதவுமாம். அதெல்லாம் உதவாது.

ஸ்ட்ரைட்: மெர்டேகா நாளில் குழாயில் தண்ணீர் வரவில்லை. மறு நாள் மழை பெய்தது. ஆனாலும், தண்ணீர் இல்லை.

நேற்று, இன்னொரு விலை உயர்வு என்று பிரதமர் வேடிக்கை காட்டுகிறார். மலேசியா- இங்கு எதுவும் நடக்கும்.