பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில், ஆகக் கடைசியாக ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அம்னோவுடன் பொதுமேடையில் விவாதிக்க விரும்புகிறார்.
டிவிட்டரில் தம் விருப்பத்தை வெளியிட்டிருக்கும் ரபிஸி, “பொது விவாதத்துக்கு (அம்னோ இளைஞர் தலைவர்) கைரி (ஜமாலுடின்)-யை அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அல்லது அம்னோவில் வேறு எவர் வேண்டுமானாலும், துணிச்சல் இருந்தால் வரலாம்”, என்றார்.
ஏற்கனவே அவ்விருவரும் உயர்கல்வி கடன் குறித்து பொதுவில் விவாதம் செய்துள்ளனர்.
டி வி 3ல் நேரடி ஒளிபரப்பு செய்தால் இன்னும் சூப்பெராக இருக்கும்…
ரபிஸி இஸ்மாயிலின் விவாத அழைப்பு மக்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நாட்டு பொருளாதார நிலவரத்தினை மக்கள் அறிய நல்ல வாய்ப்பு…
உண்மையும் நேர்மையும் இருக்குமானால் அம்னோ இந்த சவாலை ஏற்கவேண்டும்….
நஜிப் அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் இப்போது தெரிகிறதா? தேர்தலுக்கு முன்பு சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக என்பதை உறுதி செய்து விட்டது. பெட்ரோல் விலை குறையும் என்று சொன்ன அன்வர் எங்கே? லிட்டருக்கு 20 காசு உயர்த்திய நஜிப் எங்கே? இப்போதாவது உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
ithu aarambamthaan hidup baarisaan
இப்பொழுது சொரண்ட வேண்டியதை எல்லாம் சொரண்டி கொள்வார்கள்…. பிறகு அடுத்த தேர்தல் நெருங்கும் வேளையில் எண்ணெய் விலையை குறைத்து கொள்வார்கள்… இந்த அறியாத இந்த அப்பாவி மக்கள் , மீண்டும் அவர்களையே ஆட்சியில் அமர்த்துவார்கள்…. என்றுதான் இவர்கள் இந்த BN னின் தந்திரத்தை புரிந்து கொள்ள போகிறார்களோ…..