குற்றத்தை எதிர்ப்பதில் போலீசின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் 1959 ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“தீவகற்பத்தில் மட்டுமே அமலில் உள்ள இச்சட்டம் சாபா, சரவாக்குக்கும் விரிவுபடுத்தப்படும்”, என்றாரவர்.
ஆனால், அச்சட்டத்தின்கீழ் சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்யவும் 72-நாள்களுக்குத் தடுத்து வைக்கவும் போலீசுக்குள்ள அதிகாரம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
முதலில் போலிஸ்காரர்களை நேர்மையான வழியில் செல்ல கற்றுக் கொடு. மற்றதை பிறகு பேசலாம்…
ம்ம் ம்ம்ம்ம்……போலிஸ் …நேர்மை…. ஐயா நீங்க இன்னும் தூக்க தில்தான் இருக்கீங்களா ?…எழுந்திறீங்க ப்ளீஸ் ! போலிஸ்…நேர்மை…என்ன விபரீத விளையாட்டு இது? நீரும் நெருப்பும் எப்படி சேர முடியும் ….நோ நோ நோ…இட்ஸ் இம்போசிபல் ….நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் நடக்கமுடியாது.!! ப்ளீஸ் உங்க எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்க !சீக்கிரம் முகத்தை கழுவிட்டு நிஜ உலகத்துக்கு வாங்க ப்ளீஸ் !! என்ன பேசுறீங்க…மலேசியாவுல இருந்துகிட்டு இந்த மாதிரியெல்லாம் எதிர்பார்கிறது …நோ நோ நோ..இனிமே இந்த மாதிரி அறகொரை தூக்கத்துல வாய் உளறக்கூடாது என்ன? நல்ல ஜோக்கு போங்க !
அடே போங்கப்பா ….!..போலிஷ்ம் நீங்களும்….
முதலில் இவனை மாற்றனும் . ஒரு மந்திரிமாதிரியா பேசுறான் . அடுத்தவன் முகத்தை பதம் பார்த்தவன் அல்லவா இவன் . இவன் பேச்சு ரவுடி மாதிரிதான் இருக்கும் அரக்க மாட்டாதவனுக்கு ஆயிரத்தெட்டு கருக்கருவாள் என்று அல்லவா பேசுகிறான் . இருக்கும் சட்டத்தை எந்த பிசகும் இல்லாமல் பாவித்தால் எந்த மாதிரியான குற்ற செயலையும் அடக்க முடியும்..
அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ‘ அவர்களே ! உமக்கு முதலில் நாவடக்கம் தேவை.ஓ….. மன்னிக்கவும் உனக்கு தமிழ் தெரியாதே! நாவடக்கம் என்றால் என்னவென்று டாக்டர்.பாலமோகனிடம் தெரிந்து கொள்ளுங்கள் ! ஓகே !