உடலில் பச்சை குத்தப்பட்டிருப்பதை அகற்ற குண்டர்கூட்டம் குடுகுடு ஓட்டம்

igp‘ஆப்ஸ் கண்டாஸ்’ நடவடிக்கை மிகவும் பயனளித்துள்ளது. அது, குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களைத் தங்கள் கும்பலை அடையாளம் காட்ட உடலில் குத்தியுள்ள பச்சையை அகற்ற அண்டைநாடுகளுக்கு ஓட்டம் பிடிக்க வைத்துள்ளது.

அப்படி ஓடிசெல்ல முனைந்த சிலர் பிடிபட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.

உள்நாட்டில் பச்சையை அகற்ற முற்பட்டால் பிடிபடலாம் என்ற அச்சத்தால் வெளிநாடுகளுக்கு ஓடிச் செல்வதாக அவர்கள் கூறினார்களாம்.