குற்றச்செயல் உயர்வுக்குக் காரணம் சட்டமா, அமலாக்கமா?

ysayஉங்கள் கருத்து: ‘நம் அண்டை நாடுகளிடமிருந்து, அவர்கள் குற்ற விகிதத்தை எப்படிக் கட்டுக்குள் வைத்துள்ளார்கள் என்று  பாடம் கற்பது நல்லதாக இருக்கும்போல் தெரிகிறது. அவர்கள் சட்டம் போதுமானதாக இல்லை என என்றும் குறை சொன்னதில்லை’

ஜாஹிட்: போலீஸ் கரத்தை வலுப்படுத்த பிசிஏ திருத்தப்படும்

சாது3: மலேசியாவில் குற்றங்கள் பெருகுவதற்கு சட்டங்கள் போதாமை காரணமா திறமையற்ற அமலாக்கம் காரணமா?

நம் அண்டை நாடுகளிடமிருந்து, அவர்கள் குற்ற விகிதத்தை எப்படிக் கட்டுக்குள் வைத்துள்ளார்கள் என்று  பாடம் கற்க வேண்டும். சட்டம் போதுமானதாக இல்லை என அவர்கள் என்றும் குறை சொன்னதில்லை.

குற்றத்தைக் குறைக்க, குற்றவாளிகளை முடிந்த விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அதற்கு 72 நாள்களுக்குமேல் தேவை என்பது சரியல்ல.

ஒய்எப்: தேர்தலுக்குமுன் குற்றச்செயல்கள் வெகுவாகக் குறைந்து விட்டதாக அம்னோ சொன்னது. தேர்தலுக்குப் பின்னர் குற்றங்கள் அதிகரித்து விட்டது என்கிறார்கள். அப்படியானால் முன்பு சொன்னது பொய்யா?

உங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டது. பாதுகாப்பு என்ற பெயரில் குற்றமற்றவர்களையும் பிடித்துப்போட சட்டம் தேவை என்கிறீர்கள்.

மெளனமே சிறந்தது: உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அவர்களே,  குற்றத் தடுப்புச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம்.

சராஜுன் ஹொடா: போலீஸ் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்து அவர்தான் குற்றம் செய்தார் என்பதை நிறுவ முடியாது போனால் அல்லது தெளிவான ஆதாரங்களின்றி ஒருவரைக் கைது செய்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை இழப்பீடு கொடுக்குமாறு செய்ய வேண்டும்.

அது, சட்டத்தைப் பயன்படுத்தி போலீசார் பழிவாங்குதல், குற்றமற்றவர்களைத் தண்டித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும்.