தேசிய இலக்கியவாதியான ஏ.சமட் சைட், விசாரணைக்காக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
“டாங் வாங்கி போலீஸ் நிலயத்துக்குச் செல்கையில் என்னைக் கைது செய்தார்கள்”, என்று சமட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இரவு 12.30க்கு போலீசார் அவரைக் கைது செய்தனர். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டு இரவு 2.30க்கு விடுவித்தனர்.
கடந்த வாரம் “சாங் சாகா மலாயா” கொடியைப் பறக்க விட்டதன் தொடர்பில் சமட் தேடப்பட்டு வந்தார்.
ச்சே…. இவ்வளவுதானா உங்களுடைய டமார் டுமார் எல்லாம்.!!!!
என்னமோ தலையவே வெட்ட போற மாதிரி ஆஆஆ…ஊஊ… ன்னு பெருசா அறிக்கைவிட்டீங்க!!!!!!
யேன்பா வயசான காலத்துல இப்படி ஓட விடுரீங்க..
ஐயா , நீங்கள் ஒரு தேசிய இலக்கியவாதி , அதற்காக தலைவனக்குகிறேன். நம் நாடு தாய்க்கு சமம் என்று எழுதிவிட்டு , பிறகு இழிவுபடுத்துவது சரியா? அரசியல்வாதிகள் செய்யும் காரியங்கள் நம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லைதான் . அதற்காக அவர்களுக்கு எதிர்ப்பு காட்டுவதை வரவேற்கிறேன். ஆனால் தேசிய தினதன்றா வேறொரு கோடியை கொண்டுவந்து ஆர்பாட்டம் செய்வது? நமது பண்பாடு ,கலாசாரம் ,ஒழுக்கம் அத்தனையும் எழுத்து மூலமாக தந்தீர்களே , எல்லாம் வீணா? மறுபக்கம் , போலீஸ் , இரவு 12.30 க்குதான் உங்களுக்கு நேரம் கிடைத்ததா ? அதற்க்கு அவரை சுட்டு கொன்றேயிருக்கலாமே ? இப்படி வரம்பை மீறி ,திமிரை காட்டுவதால் , உங்கள் ஆணவத்தால் மக்களை பயமுறுத்த நினைக்காதீர்கள். உங்கள் ராஜ்ஜியம் ஒருநாள் அழிந்தே போகும் !!