அரசாங்கம் எரிபொருளுக்கு வழங்கும் உதவித்தொகையின் காரணமாகத்தான் குறைந்த எண்ணெய் விலை கொண்ட நாடுகளின் வரிசையில் மலேசியா எட்டாவது இடத்தில் உள்ளது.
ரோன்95 பெட்ரோலின் விலையும் டீசலின் விலையும் 20 சென் உயர்ந்துள்ள போதிலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவில் எண்ணெய் விலை குறைவுதான் என்று துணை நிதி அமைச்சர் அஹ்மட் மஸ்லான் கூறினார்.
உதவித் தொகை குறைக்கப்படுவது பொருளாதாரத்துக்கு நீண்ட கால நன்மையைக் கொண்டுவரும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இந்த உதவித் தொகை 1மலேசியா மக்கள் உதவி (பிஆர்1எம்) என்ற பெயரில் தேவைமிகுந்த மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் என்றாரவர்.
அமைச்சர் அவர்களே அண்டை நாடுகளில் தொல் கட்டணம் இல்லையப்பா ஆனால் இங்கு …..? நீர் அமைச்சர் ரா ….வெட்க கேடு …..
இந்த விலை ஏற்றத்தையும் நீங்கள் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னாள் தெரிவித்திருந்தால் மக்கள் இப்படி ஏமார்ந்து இருக்கமாட்டார்கள்!!!!
கடந்தாண்டு இந்த எண்ணெய் விலையேற்றம் இருக்காது என்று இந்த பி என் அரசாங்கம்தானே மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது!!!
பாவம் உங்கள் பேச்சை நம்பி ஒட்டு போட்ட அப்பாவி மக்கள்…
அமாம்.. அண்டை நாடான சிங்கை மக்களின் மாத வருமானம் பல மடங்கு அதிகமாச்சே.. அதைப்பற்றி யெல்லாம் எப்பொ பேசுவீர்கள்?
எதுக்கு இவ்வளவு சிரமம்… அரசியல்வாதியின் சம்பள உயர்வில் எடுத்து கொடுக்கலாமே… மக்களுக்காக உழைக்கும் ஜீவன் அவர்கள்தானே.. முடியாதுன்னு சொல்லவா போறார்கள் … இல்லை பில்லியன் கணக்கில் மறைந்த கருப்பு பணத்தை கொண்டு உதவலாமே… கேனயன் என்றால் இப்படியா சொரண்டுவது… 1 கொடுத்து 100 எடுப்பது போல் இருக்கே????
துணை நிதி அமைச்சர் அஹ்மட் மஸ்லான் அவர்களே..
ஒப்பீடு என்பது எல்லாவற்றிலும் இருக்க வேண்டும். கல்வி, வருமானம், வேலைவாய்ப்பு, இதர விலைவாசிகள் என்று எல்லாவற்றிலும் ஒப்பீடு செய்ய வேண்டும். மாறாக உங்களுக்குத் தேவையானதில் மட்டும் ஒப்பீடு செய்வது எனது நீங்கள் அதிமேதாவி என்பதைக் காட்டுகிறது.
engalidame eduthu engalukke aappu
துணை அமைச்சருக்கு மக்களின் நிலை தெரியாது. 20 காசு என்ன 50 காசு உயர்ந்தாலும் உங்கள் காருக்கு எண்ணெய் ஊற்ற நீங்கள் பணம் செலவு செய்தால் அதன் சுமை உங்களுக்கு தெரியும். மக்கள் தரும் வரி பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் அமைச்சர் பெரு மக்களுக்கு இதெல்லாம் தெரியாது. பொறுப்பு ஏற்ற உடன் எண்ணெய் விலை குறையும் என்று சொன்ன அன்வர் எங்கே? 100 நாட்களில் 20 காசு ஏற்றிய BN அரசாங்கம் எங்கே?
அமைச்சரே, கொஞ்சம் ஏமாந்தால், காதிலே பூ மட்டுமல்ல, மாலையே போட்டுவிடுவீர்கள். மற்ற நாடுகளை விட நம் நாட்டில் பெற்றோலின் விலை மலிவுதான், மலிவான பெட்ரோலுக்கு மலிவான விலைதான் கொடுக்கவேண்டும். ஆம்! அண்மையில் ஒரு வெளிநாட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு லிட்டர் பெற்றோலின் விலை, நம் காசுக்கு ஏறத்தாழ 3.50காசு. ஆனால்.ஒரு லிட்டர் பெட்ரோலில் ஒரு மோட்டார்சைக்கிள் 85 கிலோமீட்டர் ஓடுகிறது. இங்கே வெறும் 35 கிலோமீட்டர்தான் ஒரு லிட்டருக்கு.தரம் குறைவான எண்ணையை நம் தலையிலே கட்டுவதுமல்லாமல், விலை குறைவாம்.
எட்டாவது இடம்தானே முதல் இடத்தில் இல்லையே… பிறகு என்ன வீண் பேச்சு….
சிங்கப்பூரில் ,தாய்லாந்தில் பெட்ரோல் கிணறு கிடையாது அமைச்சரே !