ஸ்ரீபிரிஸ்தானா பள்ளியில் குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணும் பொறுப்பை மசீச ஏற்பது நல்லது என இந்திய என்ஜிஓ ஒன்று கூறுகிறது.
மஇகா தலைவர்கள் “துணிச்சலற்றவர்கள்” என்பதால் அவ்விவகாரத்துக்கு அவர்கள் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என மலேசியன் தமிழ் டுடே அமைப்பின் செயலாளர் கே.குணசேகரன் குறிப்பிட்டார்.
“கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன், எதுவும் செய்ய முடியாதிருக்கிறது என்று கூறிவிட்டார்.
“அவர் சொல்வதை அவரது அமைச்சின் அதிகாரிகள் கேட்பதில்லை என்பதே அதன் பொருள். அதாவது, அவர் வெறும் கைப்பாவைதான்”.
அவ்விவகாரத்தைத் துணிச்சலுடன் எடுத்துப்பேசும் மசீச இளைஞர் துணைத் தலைவர் வீ கா சியோங்கையும் மகளிர் உதவித் தலைவர் ஹெங் சியாய் கை-யையும் தாம் உயர்வாக மதிப்பதாய் குணசேகரன் கூறினார்.
நமது பாயத்துடிக்கும் பாண்டவர் குலத்திலகம் ரமணனுக்கும் இதே நிலைதானா?
ஐக்…ஐக் … அப்படியெல்லாம் சொல்லப்படாது!!!
மா இ கா காரன்களுக்கும் அவனது எடுபிடிகளுக்கும் பொத்துக்கிட்டு வரும் கோபம் …
குறிப்பாக கமலனாதனுக்கு ரொம்ப ரோசம் வரும்..
அவன் குளியலறை பக்கத்தில் உட்கார்ந்து தின்னு பழகியவன் ஆயிற்றே!!! சூடு சொரணை கொஞ்சமாவது இருக்கும்னு நெனைக்கிறேன்!!!!
இதுதான் உண்மை மா இ கா நமக்கு தேவை இல்லை ,அதனால்தான் தேர்தலில் தோற்க அடித்தோம்
நெஞ்சு பொறுக்க வில்லையே,இந்த மானங் கெட்ட ம.இ.காவை நினைந்து விட்டால்,இந்த நெஞ்சு பொறுக்க வில்லையே.