தேசிய இலக்கியவாதியான ஏ.சமட் சைட் இரவு பின்னேரத்தில் தடுத்துவைக்கப்பட்டது பற்றிக் கருத்துரைக்க முனைந்த பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகாவால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
“மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் இப்படியா நடந்துகொள்வது”, என்றவர் பொறிந்து தள்ளினார். “பின்னிரவு 12.30க்கு அவரது வீட்டுக்குச் சென்று விசாரணைக்காக அவரைக் கைது செய்து இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் அவரை விடுவிக்க வேண்டிய அவசியம் என்ன?
“இது அப்பட்டமான அலைக்கழிப்பு. முற்றிலும் தேவையற்ற ஒன்று…….போலீசுக்கும் அது தெரியும். ஒரு சின்ன விசயத்துக்காக அம்மனிதரைத் தொந்திரவு செய்திருக்க வேண்டியதில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சட்டம் என் கையில் என்ற மனப்போக்கு…
இதுதான் அதிகார துஷ்பிரயோகம் என்பது. இன்னும் போகப் போக பார்க்கத்தானே போகிறோம்.
சாங் அரிமௌ கோடியை வைத்துகொண்டு ஆட்டினால் இப்படிதான் நடக்கும்.
மேடம் விடுங்க எப்படியாவது போய் தொலையட்டும்..அப்புறம் உங்களுக்கும் ஒரு குண்டு ரெடி பண்ணிருவாங்க இந்த பிகாளிங்க..!!!
13 பொது தேர்தலில் தமிழர்கள் செய்த தப்பு..பின் என்னும் ஒரு முட்டாள் அரசங்க தேர்வு செய்தது….
மேடம் கவனம் C4 உங்களையும் விடாது ??????????