இஓ இரத்தான பின்னர் வன்முறை குற்றங்களில் 5 விழுக்காடு உயர்வு

1 crimeதடுப்புச் சட்டங்கள் அகற்றப்பட்ட பின்னர், நாட்டில் வன்முறை சார்ந்த குற்றங்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு உயர்ந்தது என போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார்.

அவசரகாலச் சட்ட  விதிகள் (இஓ)  இரத்துச் செய்யப்படுவதற்கு   20 மாதங்களுக்கு முன்பு, 43,313 வன்முறை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.   20 மாதங்களுக்குபின் அவை 45,664 என உயர்ந்தன. கோலாலும்பூரில் குற்றம் மீதான கருத்தரங்கில்  அவர் இப் புள்ளிவிவரத்தை வெளியிட்டார்.

“குற்றத்தை எதிர்த்துப் போராட போலீசுக்குப் போதுமான கருவிகள் இல்லை. கருவிகள் என்னும்போது தடுப்புச் சட்டங்களையே குறிப்பிடுகிறேன். சட்டங்கள் அகற்றப்பட்டாலும் அவற்றுக்குப் பதிலாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை”, என்றாரவர்.