மலேசிய பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் (பிடிஏஎம்), அரசாங்கம் சாலை வரியை இரத்துச் செய்து 2000 சிசி கார்களுக்கான காப்புறுதிக் கட்டணத்தையும் குறைக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொண்டுள்ளது.
அது, குறைந்த- நடுத்தர வருமானம் பெறும் மக்கள் நடப்புப் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என அதன் தலைவர் ஹஷிம் ஒத்மான் கூறினார்.
“எரிபொருள் உதவித் தொகை குறைக்கப்படுவதால் மிச்சப்படும் பணத்தை சாலைவரியை இரத்துச் செய்வதற்கும் காப்புறுதிக் கட்டணத்தைக் குறைக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்”, என்றாரவர்.
நல்ல யோசனைதான்;200 cc க்கும் குறைவாயுள்ள மோட்டார்சைக்கில்களின் காப்புறுதிக்கட்டணம் மிக மிக அதிகம்.வாகனங்களின் 3rd party காப்புறுதி கட்டணமும் அதிகம்.இக்கட்டணங்களை குறைத்தால் நடுத்தர மக்களின் வாழ்க்கைச்சுமை குறையும்.
நல்லது நடந்தால் சரி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் வைதிருக்கும் 80 cc மோட்டார் சைக்கில் முன்பெல்லாம் வெறும் 35 வெள்ளி காப்புறுதிதான்,போன வாரம் எடுத்தேன் 119 வெள்ளியாகி விட்டது. நல்ல முன்னேற்றம் .
பெட்ரோல் உதவி தொகை மீட்டுக்கொள்ளப்பட்டதே 2020
இலச்சியத்தை அடையவே.அதிலே கை வைக்காதீர்கள்.நாடு வளர வேண்டும்.நாட்டு மக்கள் அப்படியே இருங்கள்.சரியா.?