வாக்காளர் பட்டியலில் குறையுண்டு, ஆனால் அதற்கு இசி பொறுப்பல்ல- முன்னாள் தலைவர்

1 rashidமலேசியாவின் வாக்காளர் பட்டியல் “ஒழுங்காய்” உள்ளது ஆனால் “அனைத்துலக தரத்துக்கு ஏற்ப இல்லை” என்கிறார் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான்.

மலேசியாகினி, மின்னஞ்சல்வழி நடத்திய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.

வாக்காளர்களில் “பெரும்பாலோர்” தாங்கள் குடியிருக்கும் இடத்தில் வாக்களிப்பதில்லை. இதனால்தான் ஆவி வாக்காளர் பற்றிய குற்றச்சாட்டு எழுகிறது.

இப்படிப்பட்ட குறைகூறல்களைத் தவிர்க்க பல நாடுகள் செய்வதுபோல் தேர்தலுக்குமுன் புதிய வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதுதான் நல்ல வழி என 2009-இல் இசி-இலிருந்து பணிஓய்வு பெற்றவரான ரஷீட் கூறினார்.

“அரசியல் உறுதிப்பாடும் பட்ஜேட் வசதியும் இருந்தால் நாமும் அதைச் செய்யலாம்.

“தேர்தல் சட்டங்களும் இசி-க்குப் போதுமான அதிகாரத்தை வழங்குவதில்லை. அதையும் வலுப்படுத்த வேண்டும்”, என்றாரவர்.