புதிய கல்வி பெரும் திட்டம் தாய்மொழிப்பள்ளிகளைப் பாதுகாக்கும்

1 dpmதாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து இருக்கும். புதிய கல்வி பெரும் திட்டத்தில்  அவை பாதுகாக்கப்படும்.

இன்று புதிய தேசிய கல்வி பெரும் திட்டத்தை அறிமுகம் செய்த கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

சீன, தமிழ்ப் பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படுவதற்கு கல்விச் சட்டம் 1966 (பகுதி 28) உத்தரவாதம் அளிப்பதைத் துணைப் பிரதமருமான முகைதின் சுட்டிக்காட்டினார்.

“அவற்றின் இருப்புக்கு என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டதில்லை”, என்றாரவர்.