டிஎபி: இஓ இரத்தாவதற்கு முன்பே வன்முறை குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளன

1-dap2005-இலிருந்தே, அதாவது அவசரக் காலச் சட்டம் அகற்றப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்பே, வன்முறை சார்ந்த குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளன என டிஏபி கூறுகிறது.

“2005-இலிருந்து 2009 வரை, தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்படுவதற்கு முன்பே, வன்முறை குற்றங்கள் ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளன. அப்படி இருக்கையில் (ஐஜிபி) காலிட் (அபு பக்கார்) அச்சட்டம் அகற்றப்பட்டதுதான் வன்முறை குற்றங்களின் அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறுவது எப்படி சரியாகும்”, என டிஏபி-இன் கூலாய் எம்பி தியோ நை சிங் வினவினார்.