பழனி போன்ற தலைவர்கள் இருக்கையில் இந்தியர்களுக்கு வேறு பகைவர்கள் தேவையில்லை

1micஉங்கள் கருத்து   ‘ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன, அவற்றின் புனிதத்தன்மை கெடுக்கப்படுகிறது. ஆனால், மஇகாதலைவர் ஜி.பழனிவேல் என்ன செய்கிறார், கட்சித் தேர்தலில் தம்மை யாரும் எதிர்க்காமல் பார்த்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்’

பழனிவேல் இன்னொரு பல்டி, 2016-க்குப் பின் இருக்க மாட்டாராம்

நியாயம், நேர்மை: ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன, அவற்றின் புனிதத்தன்மை கெடுக்கப்படுகிறது, பள்ளிப் பிள்ளைகள் குளியலறையில் உணவருந்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், அது ஏனென்று கேட்கும் பெற்றோர் விசாரணைக்குள்ளாகிறார்கள், மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இடங்கள் பெறுவதற்குப் படாத பாடு படுகிறார்கள். ஆனால், மஇகா தலைவர் ஜி.பழனிவேல் என்ன செய்கிறார், கட்சித் தேர்தலில் தம்மை யாரும் எதிர்க்காமல் பார்த்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

இப்போது, அவரது பதவிக்கு ஆபத்தில்லை என்றானதும் 2016-க்கு பிறகும் பதவியில் தொடரலாமா என்று யோசிக்கிறார். அப்படி விலகினால் தமக்குப் பின் யாரை நியமிப்பது என்று யோசிக்கிறார்.

இவரெல்லாம், சமூகத்தின் தலைவர். நினைக்கும்போதே சிரிப்பாய் வருது. இப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கையில் இந்தியர்களுக்கு வேறு எதிரிகள் தேவையில்லை.

சசி:  பழனிவேல்,  தலைவராக இருக்கும் தகுதி தமக்குண்டா என்று தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இந்திய சமூகத்துக்காக நீங்கள் எதுவும் செய்ததில்லை, ஓய்வுபெறுவதற்குமுன் எதுவும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

கேஎஸ்எ:ன்: அடுத்த மூன்றாண்டுகளுக்கு மஇகா அமைப்புவிதிகளில் கவனம் செலுத்தப்போகிறீர்கள், அப்படித்தானே? நான்கூட நினைத்தேன், இந்தியர்களின் பொருளாதார மேம்பாடுக்காக நீங்கள் ஏதோ செய்யப் போகிறீர்கள் என்று.

பழையவன்: ஒரு பிரச்னை என்றால் பிரதமர் வந்து தீர்த்து வைக்க வேண்டியிருக்கு. இப்படிப்பட்ட மஇகா-வை எப்படி ஐயா நம்புவது?