எரிபொருள் விலை உயர்வால் என்ஜிவி விலை உயரலாம் என டெக்சி ஓட்டுனர்கள் கவலை

1 fuelபெட்ரோல் விலை உயர்வால்  இயற்கை எரிவாயு(என்ஜிவி)வில் ஓடும் கார்களுக்கான தேவை அதிகரிக்கும். அதனால் என்ஜிவி-யைப் பயன்படுத்துவதற்கான சாதனங்களைப் பொருத்தும் செலவுகள் அதிகரிக்கும் என டெக்சி ஓட்டுனர்கள் கூறுகின்றனர்.

அது தங்களின் பிழைப்பைக் கெடுக்கும் என்று கூறி டெக்சி ஓட்டுனர்கள் அடங்கிய சிறு கும்பல் ஒன்று நேற்று தாமான் பஹாக்யா எல்ஆர்டி நிலையத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

“முன்பு அதற்கு ரிம3,000-இலிருந்து ரிம5,000 வரை செலவானது. இப்போது அது ரிம7,000 ஆக அதிகரித்து விட்டது”, என மீட்டர் போட்டு டெக்சி ஓட்டுனர்கள் நடவடிக்கைக் குழுத் தலைவர் அம்ரான் ஜான் கூறினார்.