கோலாலும்பூரில் 100ஆண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரர் காளியம்மன் கோயிலின் “புனிதத்தன்மையைக் கெடுக்கும்” வகையில் நடந்துள்ள செயல்கள் பிஎன் அரசு மற்ற சமயங்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதைக் காண்பிக்கிறது என டிஏபி சாடியுள்ளது.
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தெய்வச் சிலைகள் கவனமாக, சிதைக்கப்படாமல்தான் அகற்றப்பட்டன என்று சொன்னாலும் த ஸ்டார் செய்தி ஒன்று நான்கு சிலைகள் “பகுதி உடைந்திருப்பதைக் காட்டின”என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
லிம் குவான் எங் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பிஎன் இந்து சமயங்களை மதிக்கவில்லை என்பது எபோதே தெரயுமே!
இது தெரிந்த விஷயம் தானே
நம்மை விற்று விட்ட MIC -காரன்கள் – இதை எல்லாம் கண்டுகொள்ளமாட்டான்கள்…..சூடு சொரணை இல்லா பிண்டங்கள்.
பாவம்! ‘தி ஸ்டார்’ காரனை மாட்டி விட்டீர்கள்! இனி அவர்கள் கோவில்களை உடைத்தால் படம் எடுக்கக் கூடாது என்று கட்டளைகள் பிறப்பிக்கப்படும்!
அல்லா தான் மெய்யான இறைவன், அந்த அல்லாவின் மதம்தான் இசுலாம்! ஆக ஏனைய மதங்கள் அனைத்தும் சாத்தானின் மதங்கள்! அந்த மதக்கடவுள்(கள்) சாத்தான்(கள்) என்ற நம்பிக்கையை நமது மலேசிய மனிதஉடன்பிறப்புகளின் மனத்திலே வேரூன்ற செய்துவருகின்றனர் மதவெறியினர்! இவ்வாறான சூழலில் எவ்வாறு மலரும் பரந்த மனம்! ஆழ்ந்த ஞானம்!
பாரிசானின் பொழுது போக்குகளில் இதுவும் ஒன்று ,ம்ம்ம்ம்ம்ம் நஜிப் மீது நம்பிக்கை வையுங்கள்
ஆமாம் BN இவர்களே ஒரு குண்டர் கும்பல் தானேஎப்படி முடிவு
எடுப்பார்கள் .
பாரிசானும், இந்த அரசை ஆளும் கட்சியும்[அம்னோ] இப்படித் தான் செய்வார்கள். இவர்களை திருத்த முடியாது. யாரை குறை கூறியும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. நாம்தான் விழிக்கவேண்டும். பூனைக்கு யார் மணிக் கட்டுவது என்பதே தற்போதைய பிரச்சினை.
பழனி.. எனக்கு ஒரு டவுட்டு.. இதுக்கும் நஜிப்புகிட்டெ ஆலோசனை கேட்டுட்டு அப்புரம் அறிக்கை விடப் போரிங்களா.. இல்லே எஸ்கேப்பா?
இந்த நாட்டில் இஸ்லாம் அல்லாத மதத்திற்கு ஒரு மரியாதையோ அல்லது பாதுகாப்போ கிடையாது . இறைவன் மீது நம்பிக்கை வை என்பது இஸ்லாத்துக்கு மட்டுமே . ஏனைய மதத்தை எப்படி வேண்டுமானாலும் மிதிக்கலாம் என்பது BN நின் எழுதாத சட்டம் . இதில் வேதனை என்ன வென்றால் இந்தியர்கள் சிலருக்கு கடவுளை எப்படி வணங்குவது எதை வணங்குவது என்பதில் கூட குழப்பம் . சந்தியா வந்தனம் செய்ய தெரியாதவனுக்கும் செய்ய சோம்பல் படுபவனும் கூட கோவில் தலைவராக ஆசை , வீட்டுக்கு வீடு கோவில் . முறையான வழிபாடு கிடையாது . இப்படி இடிபடும் கோவிலை நினைக்கும் பொது மனம் வேதனை படுகிறது .
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…..நம் கோவில்கள் இன்று இந்த நிலையில் உல்லதற்கு நாமும் ஒரு காரணம் தானே…..ஒரு சமுதாயத்திற்கு கோவில் தேவை, ஆனால் இப்பொழுது ஒரு குடம்பத்திற்கு ஒரு கோவில் என்ற நிலை ஆகிவிட்டது……