கல்வி அமைச்சு, பொதுத் தேர்வுகளில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க இன்னும் காலம் கனியவில்லை என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.
முதலில் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றாரவர்.
“இது (ஆங்கிலத்தில் கட்டாய தேர்ச்சி) மாணவர்களுக்குப் பெரும் சுமையாக அமையும். ஏனென்றால், வசதிகளோ ஆசிரியர்களோ அந்தத் தரத்தில் இல்லை”, என்று அன்வார் சொன்னார்.
அன்வார் கூறுவது முற்றிலும் உண்மை. தற்போதைய ஆசிரியர்கள்
ஆங்கில மொழி போதிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று அவர்
கூறுவது உண்மை.
இப்படி சொல்லிக்கொண்டே இன்னும் எவ்வளவு காலம்தான் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருப்பது???
ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாதோர் கைத்தொழில் பயின்று வாழ்வின் முன்னேறலாம் அல்லவே????
அதே வேளையில், இடைநிலைப் பள்ளியில் கணிதமும் அறிவியலும் மறுபடியும் ஆங்கிலத்தில் போதிக்கப் படவேண்டும்…அல்லது முன்பு போல் ஆங்கிலம் மற்றும் தேசிய மொழி இடைநிலைப் பள்ளிகளை அமலுக்கு கொண்டுவரவேண்டும். இதற்கு வாய்ப்பு உண்டா இந்த பி என் ஆட்சியில்??? …
வசதிகள் உண்டு. ஆனால் மலாய்க்கார ஆசிரியர்கள் அந்தத் தரத்தில் இல்லை! ஆங்கிலத்தை மலாய் மொழியில் போதிக்கும் அவர்களை வைத்துக்கொண்டு இன்னும் இருபது ஆண்டுகள் ஆனாலும் காலம் கனியாது!
நமது நாட்டின் கல்விக்கொள்கை கலங்கிப்போன குட்டையாகிவிட்டது! மலேசியக் கல்விக்கொள்கை வகுப்பாளர்க்குச் சிந்தனைத்தெளிவும் இல்லை, இலக்கும் இல்லை என்பதை அன்று முதல் இன்று வரையிலான அவர்களின் முரண்பட்ட நடவடிக்கைகள் சுட்டுகின்றன!
மாணவர்களுக்கு சுமையாக அமைந்தாலும் ஆங்கில பாடத்தில் கட்டாய தேர்ச்சி பெறுவது அவசியம். உலக மயத்தால் இது அவசியமாகிறது. .வேறு வழி இல்லை.
நான் ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் ஆங்கிலம் 3ஆம் வகுப்பில்தான் போதிக்க ஆரம்பித்தார்கள். தேசியப் பள்ளியில் முதலாம் வகுப்பிலேயே போதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் மலாய் மாணவர்கள் ஆங்கிலமொழியில் இந்திய மாணவர்களுக்கு அடுத்துதான். இதை ஆராயுங்கள். மலாய் மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்க ஒரே தீர்வு ஆங்கில இடைநிலைப் பள்ளிகளே!
போதுமான பயிற்சி இன்றி போருக்கு போனால் என்ன ஆகும். தோல்விதான். பிபிஎஸ்.எம் இல் தோல்விக்குக் காரணம் இதுதானே. ஆங்கிலத்தில் உறுதியான அஸ்திவாரம் இல்லாமல் ஆங்கிலம் போதிக்க புறப்பட்டால் வெற்றி எங்கிருந்து கிடைக்கும். இன்று இந்நாட்டில் நல்ல ஆங்கிலம் பேசும் மலேசியர்கள் அன்றைய ஆங்கிலப் பள்ளிகளில் பயின்றவர்கள்தான். இந்த நேரத்தை கூட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது !!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆமம் இப்பொழுது அரசியலில் ஆங்கிலம் பேச தெரிந்த அறிவாளிகள்
எதனை பேரு இருக்கிறார்கள் பெரும்பாலும் mangkuk .
அன்வார் இப்படிச் சொல்ல கூடாது……இப்படிச் சொல்லி-சொல்லி தான் இன்று நாம் பேசும் ஆங்கிலம் மிக மோசமான நிலையில் உல்லது!
நண்பர் BOTHIVARMAR – அவர்களே நிங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மைன்..உண்மை உண்மை..! ஆங்கிலம் என்ன? சீன மொழியே கற்று கொள்ள நம் இந்தியர்களால் முடியும்… மலாய் காரர்காளால் முடியுமா ??? ஆங்கிலம் பாடத்தை கட்டாய தேர்ச்சி பாடமாக கொண்டு வந்தால் அதில் முற்றிலும் தேர்ச்சி பெறாமல் போவது மலாய் மாணவாகள்கலே….! மொழியை வளர்த்து கொள்ளாத அவர்கள் fail போகாமல் வேறு எங்கே போவார்கள் ..!!!
அன்வார் என்னை விலையை பற்றி பேசாமல் இருப்பது ஏனோ?