வழக்குரைஞர் மன்றம், சுஹாகாம் கூறுவதை ஐஜிபி கவனத்தில் கொள்ள வேண்டும்

IGP Khalidபெற்றோர்களுக்குத் தெரியாமல் குழந்தைகள் போலீஸ்காரர்களால் விசாரிக்கப்படுவதில் தவறு ஏதும் இல்லை என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறியிருந்ததை அவர் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைக் கழகமான சுஹாகாமும், வழக்குரைஞர் மன்றமும் இது குறித்து எதிர்மறையான கருத்து தெரிவித்திருப்பதால், காலிட் அவ்வாறு செய்ய வேண்டும் என்று செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, ஐஜிபி காலிட் குறைந்தபட்சமாக அவரது அறிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டு ஒரு குழந்தையின் உரிமைக்கு மதிப்பு அளித்து அது பாதுகாப்படுவதை உறுதி செய்வதற்காக பின்பற்ற வேண்டிய முறையான விதிமுறைகளை அவர் போலீசாருக்கு அளிக்க வேண்டும் என்று கோ கூறினார்.

“சுஹாகாம் மற்றும் வழக்குரைஞர் மன்றம் ஆகியவற்றின் அறிக்கைகள் நேர்மையற்ற ஒன்றை ஐஜிபி தற்காக்க முடியாது என்பதை மீண்டும் நிருபித்துள்ளன.

“நாட்டின் முதல்நிலை போலீஸ்காரராக இருப்பதால், சட்டங்கள் பற்றிய காலிட்டின் விளக்கம் போலீசார்

DAP Theresa Koh

பின்பற்ற வேண்டிய விதிமுறையாகவும், உத்தரவாகவும் அமைந்து விடும்”, என்று கோ மேலும் கூறினார்.

ஸ்ரீ பிரிஸ்தான தேசியப்பள்ளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் உடனில்லாமல் போலீசார் விசாரித்ததை காலிட் கடந்த வியாழக்கிழமை பகிரங்கமாக தற்காத்து பேசினார். மாணவர்கள் விசாரிக்கப்படும் போது பெற்றோர்கள் உடனிருக்க வேண்டும் என்று சட்டம் கூறவில்லை என்று அவர் அதற்குக் காரணம் கூறினார்,

இதற்கு பதில் அளித்த சுஹாகாம் போலீஸ் குழந்தைகள் சட்டம் 2001 ஐ மீறி இருக்கக்கூடும் என்று கூறியது. குற்றவியல் நடைமுறை சட்டத் தொகுப்பின் பிரிவுகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கையில் குழந்தையின் பாதுகாப்பாளர் உடனிருக்க வேண்டும் என்பதை உள்ளடக்கியுள்ளது என்று வழக்குரைஞர் மன்றம் விளக்கம் அளித்துள்ளது.