புரொஜெக்ட் ஐசி-இல் எனக்கு சம்பந்தமில்லை: முன்னாள் துணை அமைச்சர்

yahyaமுன்னாள் துணை அமைச்சர் யாஹ்யா லம்போங் (இடம்), தாம் முன்னாள் உள்துறை துணை அமைச்சர் மெகாட் ஜுனிட் மெகாட் ஆயுப்பைச் சந்தித்ததுமில்லை,  அவரிடம் புரொஜெக்ட் ஐசி தொடர்பில் உத்தரவு எதையும்  பெற்றதுமில்லை  என்று   சாபா அரச  விசாரணை  ஆணையத்திடம்(ஆர்சிஐ) தெரிவித்தார்.

இதற்குமுன்,  சாபா கள்ளக்குடியேறிகள் மீது விசாரணை நடத்திவரும் ஆர்சிஐ-இடம்  சாட்சியமளித்த ஹஸ்னார்  இப்ராஹிம்  தாமும் யாஹ்யாவும்  1986-இல் புரொஜெக்ட்  ஐசி தொடர்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மெகாட் ஜுனிட்டைச் சந்தித்து விளக்கம் பெற்றதாகக் கூறியிருந்தார்.

“அது உண்மையல்ல,  அது (சந்திப்பு) நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் நான் பெர்ஜெயா கட்சியை விட்டு விலகி விட்டேன்.  நான் புதிய வாக்காளார்களைப் பதிவு செய்ய முற்பட்டேன் என்று கூறுவதில் உண்மை இல்லை.  அதில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை”,  என 13-வது பொதுத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளராகப் போட்டியிட்ட யாஹ்யா கூறினார்.