பக்காத்தான்: செயல்திட்டத்தில் பல விசயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன

blueprintதுணைப் பிரதமர் கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி செயல்திட்டம் 2013-2025, அதன்மீது அக்கறை கொண்டவர்கள் முன்வைத்த கருத்துகளையும் பரிந்துரைகளையும்  கவனத்தில் கொள்ளவில்லை என பக்காத்தான் ரக்யாட் கூறுகிறது.

அதன் விளைவாக, அச் செயல்திட்டம் நம் கல்விமுறையில் உருப்படியான மாற்றங்களும் சீரமைப்புகளும் ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என அந்த மாற்றரசுக் கட்சியின் கல்வி பணிக்குழு தெரிவித்துள்ளது.

அதில் உள்ள பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அக்குழு, பெற்றோரின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ப புதிய சமயப் பள்ளிகள் மற்றும் சீன, தமிழ்ப் பள்ளிகள் கட்டப்படுவது பற்றி  அதில் எவ்வித குறிப்பும்   இல்லை என்றது.