காய்கறிகளின் விலை உயர்ந்தது, பேருந்து கட்டணம் உயரப்போவதாக மிரட்டுகிறது

priceகடந்த வாரம் எரிபொருளுக்கான உதவித் தொகை குறைக்கப்பட்டதை அடுத்து காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. பள்ளி பேருந்து கட்டணம் ஆண்டு இறுதியில் உயரக்கூடும்.

பள்ளி பேருந்து கட்டணத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் (Spad) மறு ஆய்வு செய்து கொண்டிருப்பதாகவும் ஆண்டு இறுதியில் அது முடிவுறும் எனவும் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

இதனிடையே, உதவித் தொகை குறைக்கப்பட்டதாலும் மழையின் காரணமாகவும் காய்கறிகளின் விலை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் உள்பட,  விலை உயர்ந்திருப்பதாக த ஸ்டார்  அறிவித்துள்ளது.

“எரிபொருள் விலை உயர்தவுடனேயே காய்கறி விநியோகிப்பாளர்கள் கிலோவுக்கு 20சென் என விலையை உயர்த்தி விட்டார்கள்”, என காய்கறி விற்பனையாளர்  லத்திபா அந்த நாளேட்டிடம் தெரிவித்தார்.