உடைக்கப்பட்டது ஆலயமல்ல, சட்டவிரோத கேண்டீன்தான்-அமைச்சர்

templeஒரு வாரத்துக்குமுன் டிபிகேஎல் அதிகாரிகள் உடைத்தது ஆலையத்தை அல்ல,  ஒரு கேண்டீனைத்தான் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் மீண்டும் வலியுறுத்துகிறார்.

“நானும் சமயப் பற்றுள்ளவன்தான், தொழுகை செய்பவன்தான்.  மற்றவர்கள் வழிபாடு நடத்தும் இடத்தை உடைக்க  உடன்படேன்”, என அட்னான் பிரிக்பீல்ட்சில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

adnan“அது ஒரு சிறுகோயில். அதை உடைக்கவில்லை. அதைத் தரம் உயர்த்தி வழிபாடு நடத்த நல்லதோர் இடமாகவும் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடமாகவும் மாற்றப்போகிறோம்.”

அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ‘சட்டவிரோத கேண்டீனும்’ குடியிருப்புகளும்தான் உடைக்கப்பட்டன என்றாரவர்.

கோலாலும்பூரில் 101-ஆண்டு பழமையான முனீஸ்வரர் ஆலயத்தின் ஒரு பகுதியை உடைத்ததன்வழி அரசாங்கம் இந்துக்களை அவமதித்து விட்டதாக குறைகூறப்பட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அட்னான் இவ்வாறு கூறினார்.