‘கல்வி செயல்திட்டத்தில் Dong Zong மட்டுமே அதிருப்தி கொண்டிருக்கிறது’

kamalanathanகடந்த வாரம் அறிமுகமான கல்விசெயல்திட்டம் 2013-2025 மீது மனநிறைவுகொள்ளாத ஒரே தரப்பு சீனக் கல்விக்காப்பு அமைப்பான  Dong Zong மட்டுமே என்கிறார் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன்.

செயல்திட்டம் இறுதிசெய்யப்படுமுன்னர் கல்வி அமைச்சர் முகைதின் யாசினுடன் சந்திப்பு நடத்திய மற்ற சீன, இந்திய கல்வி தரப்புகளுக்கு அதில் திருப்திதான் என்று அவர் கூறியதாக த நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.

“அவர்களின் கவலையைப் போக்கும் வகையில் (முகைதின்) எல்லாவற்றையும் தெளிவுபடுத்தினார். தாய்மொழிப் பள்ளிகள் பாதுகாக்கப்பட மாட்டா என்ற தொடர் செயல்திட்டதில் எங்காவது இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள்”, என்று கமலநாதன் கூறினார்.