முகம்மட் சாபுவின் பாஸ் துணைத் தலைவர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.
அப்பதவியில் சமய அறிஞர் ஒருவர் இருப்பதையே அக்கட்சியின் ஆன்மீக தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் விரும்புவதால் மாட் சாபுவின் நிலை ஆட்டம் கண்டிருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் சில தெரிவித்தன.
நிக் அசீஸ் தம் விருப்பத்தை வெளிப்படுத்தியதன்வழி எந்த வேட்பாளரைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பேராளர்களுக்கு உணர்த்தி விட்டார் என்று அவை கூறின.
கட்சியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் நிக் அசீஸ், நடப்பு தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்.
பாஸ் கட்சியில் மாட் சாபு இல்லையென்றால் அந்த கட்சி பலவீனப்படும் என்பது உண்மை ,இதை துவான் குரு உணர வேண்டும்.
மாட் சாபு, ஒரு அற்புதமான மனிதர். பொதுத்தேர்தல்களில் ஆறு முறை தோற்றும்,கட்சிகொள்கையோடு உறுதியாக இருப்பவர் [ஜ.சே.கவில் ஐந்தாறு முறைகள் தோற்றும் உறுதியோடு கொள்கையுடன் செயல்படும் கேமரன் மலை சிம்மாதிறியைப் போன்று]. மகாதிமிரை விலாசுவதில் பாஸ் கட்சியில் இவரை மிஞ்ச ஆளில்லை.
மாட் சாபு, பாஸ் கட்சியின் பிரச்சார பீரங்கி ! தோக் குரு மறந்து விட்டாரா ?
ஒரு தலைவரிடம் இருக்க வேண்டியது ஒழுக்கமும் கூட. அது இல்லாத போது ஒரு சமய நெறியை தனது அடிப்படை கொள்கையாக வைத்திருக்கும் பாஸ் கட்சியில் இவருக்கு இடமேது?