சேமிப்பில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் தேவையில்லாப் பயணங்களைக் குறைப்பீர்

rafiziநிதிநிலையை வலுப்படுத்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்போர் அனுபவிக்கும் சில  சலுகைகளை அகற்ற வேண்டும் என பிகேஆரின் கம்போங் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி ஆலோசனை கூறுகிறார்.

அவர்கள் பெட்ரோலுக்கு சொந்தப் பணத்தையே கொடுக்க வேண்டும் என்று முன்பு குறிப்பிட்ட ரபிஸி, அவர்களின் உள்நாட்டு வெளிநாட்டுப்  பயணங்களையும் குறைக்க வேண்டும் என்றார்.

“அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அவர்களின் அதிகாரிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் ஆகியோருக்கான உள்நாடு, வெளிநாட்டுப் பயணச் செலவுகளை 25 விழுக்காடு குறைக்க வேண்டும்”, என்றாரவர்.

பணத்தைச் சிக்கனப்படுத்தும் இன்னொரு வழி “விலைமதிப்பான வாழ்த்து அட்டைகளை போஸ் லாஜு வழி அனுப்புவதைத் தவிர்ப்பது”.