ஓவியப் போட்டியால் எழுந்தது சர்ச்சை

1 ubahபினாங்கு மாநில அருங்காட்சியம் மற்றும் கலைக்கூடம் ஓவியப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அப்போட்டி ‘Ubah’என்னும் கருப்பொருளில் நடத்தப்படுவதால் சர்ச்சை மூண்டுள்ளது. அது டிஏபி-க்கு மறைமுகமான விளம்பரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

13வது பொதுத் தேர்தலில் ‘Ubah’ (மாற்றம்) என்பது டிஏபி-இன் தேர்தல் முழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அது பற்றிக் கருத்துரைத்த அருங்காட்சியக உதவி பொறுப்பாளர் பைருஸ் இக்வான் சுல்கிப்ளி, அதில் அரசியல் இல்லை என மறுத்துள்ளார்.

“பினாங்கு மாநில அருங்காட்சியம் மற்றும் கலைக்கூடம் மாநில அரசின்கீழ் இருந்தாலும் உதவிக் குழுக்களில் இருப்பவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்”, என்றாரவர்.

“இது கலை, இதற்கு அரசியல் தொடர்பு இல்லை. கலைக்கு அரசியல் நோக்கமெல்லாம் கிடையாது. தற்செயலாக இப்படி அமைந்து விட்டது”, என்றார்.