கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாதது ஏன்? ஜாஹிட்டைக் கேட்கிறார் சுரேந்திரன்

pkr_n_surendran_01குண்டர்கள்மீதான போலீஸ் அதிரடி நடவடிக்கை தொடர்பில், உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி-க்கும் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரனுக்குமிடையில் வாய்ச் சண்டை தொடர்கிறது. கைது செய்யப்பட்ட குண்டர்களில் மிகச் சிலர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டிருப்பது ஏன் என்று கேட்கிறார் சுரேந்திரன்.

“அத்தனை பேர் கைது செய்யப்பட்டிருந்தும் எவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதது ஆச்சரியமளிக்கிறது”, என்றாரவர்.

கைது செய்யப்படுவோர் எண்ணிக்கையை வைத்து மட்டுமே குற்றத்தடுப்பு சிறப்பாக நடப்பதாக மதிப்பிட்டு விட முடியாது என்றாரவர்.

இதற்குமுன் அவர் ஒப்ஸ் கண்டாஸ் நடவடிக்கையை ஒரு விளம்பரத் தந்திரம் என்றவர் வருணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்ஸ் கண்டாஸ் நடவடிக்கையில் 5,0505 பேரைக் கைது செய்திருப்பதாக போலீசார் செப்டம்பர் 9-இல் அறிவித்தனர்.ஆனால், மிகச் சிலரே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 28-இல், கோலாலும்பூர் போலீசார் 27 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் ஜோகூர் போலீசார் 82பேர் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் அறிவித்தனர்.