“குளியலறை உணவருந்தும் இடமாக”ப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டதை அடுத்து முடிந்துபோனதாக நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டிருக்கிறது. மன்னிப்பு கேட்டதாகச் சொல்லப்படுவதைத் தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நூர் மறுத்துள்ளார்.
“நான் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அந்த விவகாரத்துக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாகவே நான் நினைக்கிறேன்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
பாவம் இந்த தலைமையாசிரியர்.ஒரு சிறந்த தலைமை ஆசிரியர் என்றால் இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்காது…
மந்திரி, கமலநாதனையும் விட்டுவைக்காதீர்கள்.. விடாமல் விரட்டி விரட்டி அனுப்பிவிடுவோம்…!!!!
முகம்மாட் நாசிர் ஏன் மன்னிப்பு கேட்கனும்? இதவரை நம் சமுதாய வழக்;கையை வீனாக்கிய எத்தனையோ தளைவர்கள் இன்னும் ஜாலியாகத்தான் இருக்குறாங்க….
நம்மை சிலர் முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள்.அதற்கு தமிழனும் உடன்படுகிறான்.நம் இழிவு நிலையைப்பார்தீர்களா தமிழர்களே.
மன்னிப்பு கேட்க அந்த தலைமை ஆசிரியருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?. ‘இண்டர்லோக்’ பிரச்சினை அவருக்கு தெரியாதா என்ன? அந்த ‘கழிவறை’ புத்தகத்தால் யார் மீதும் நடவடிக்கை எடுக்காத கல்வியமைச்சு, இந்த சின்ன பிரச்சினையால் என்ன செய்துவிடப் போகிறார்கள்? இது போன்ற இனப் பிரச்சினைகளை தூண்டுபவர்களை, நல்லை முறையில் கவனித்துக்கொள்ளும் இந்த அரசு. ஆகவே, அதிகாரிகளோ, அல்லது ஆசிரியர்களோ, மேலும் மேலும் இது போன்ற இனத்துவேஷங்களுக்கு உரமிடவேச் செய்வர்.
இந்த தலைமை ஆசிரியர் ,கமல நாதன் ,மாணவர்களை விசாரித்த
போலிஸ் அதிகாரி இவர்களை முதலில் மருத்துவ பரிசோதனைக்கு
அனுப்ப வேண்டும் .இவர்களிடம் கோளாறு உள்ளது .
இதற்கெல்லாம் யார் மூல காரணம் எனக் கேட்டால் பதில் அம்னோ என்றே இருக்கும். ஒவ்வொரு அரசாங்க ஊழியரும் கட்டாயமாக ஒரு பயிற்சியில்(மேல் நிலை ஊழியர்கள் மட்டுமே) இங்கே மலாய்க்காரர்கள் மட்டுமே இந்நாட்டின் உயர்மக்கள். இந்நாடு அவர்களுக்கே சொந்தம். மற்றவர்களெல்லாம் வந்தேறிகள் என்ற விஷத்தை செலுத்துபவர்கள் நமது அருமை பிரதமர் இலாகாவிலுள்ள பீரோ தாதா நெகாராவாகும். ஆக தலையை விட்டு வாலை பிடித்து கொண்டிருக்கிறோம். இதுவே பிரிவினை வாதத்திற்கு முழு முதற் காரணமாகும்.
இப்பிரச்சனை மலாய் இன வெறியின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.சிற்றுண்டி சாலை சாப்பிட கட்டபட்டது.அவர்கள் நோன்பு இருப்பதால் சிற்றுண்டி சாலையை முடி விட்டு கழி வரையோ ? குழியல் அரையோ ? அங்கே சாப்பிட வைப்பது 6 அறிவு படைத்தவர்கள் செய்யும் காரியமா ?.ஆனால் இந்த காரியத்தை செய்தவர் ஒரு மலாய்க்காரார் என்பதால் அவரை இன்னும் இந்த அம்னோ அரசு தட்காக்கிறது.இந்த ம இ கா அடிமைகள் அன்றே உரிமைக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும்.இவர்களால் தான் நமக்கு இப்படி பட்ட தலை குனிவு தொடர்ந்து நிகழ்கிறது.அம்னோவையும் ம இ காவியும் விலத்தினால் நமது மரியாதை வென்று எடுக்க முடியும்.