கள்ளக் குடியேறிகளுக்குக் குடியுரிமை கொடுப்பதற்குக் காரணமான இருந்தது என்று சொல்லப்படும் ‘புரொஜெக்ட் ஐசி’ அல்லது ‘புரொஜெக்ட் மகாதிர்’ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார் டாக்டர் மகாதிர்.
சாபாவில், கள்ளக் குடியேறிகள் மீது விசாரணை நடத்தும் அரச ஆணையத்திடம் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர், “இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன்”,என்றார்.
எதற்கு அத்திட்டத்துக்கு அப்படி ஒரு பெயர் என்று விசாரணை அதிகாரி வினவியதற்குத் தெரியவில்லை என்று மகாதிர் கூறினார்.
“எது எதற்கோ என் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனவாதி, தீவிரவாதி என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். நான் கவலைப்படவில்லை. அதெல்லாம் அரசியலில் சகஜம்”, என்றார்..
எலும்பில்லா நாக்கு என்பதை உருதிபடுத்திவிட்டார்…
ஒன்னும் தெரியாத பாப்பா இப்போதான் அதைப் பற்றிக் கேள்விப் படுகிறதாம்.
போட்டான் பாரு ஒரு பெரிய அணுகுண்டு .
முக்கிய சாட்சி மெகட் ஜுனிட் இல்லை. அதனால் இவன் இதுவும் சொல்லுவான் இன்னமும் சொல்லுவான். அரசாங்க அதிகாரிகள் மூச்சு விடவே அரசியல் வாதிகளின் அனுமதி பெரும் இந்நாட்டில் அவர்களே முடிவு செய்து அடையாள அட்டை வெளியிட்டார்களாம். இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?
இதெல்லாம் எங்களுக்கு முன்பே தெரியும் பாஸ்.. அவ்ளோ பெரிய ஜெட் இஞ்ஜின பாக்கெட்டுல போட்டு எடுத்துட்டு போயி வித்துட்டான் ஒத்த ஆளு.. அதவுடவா இது பெரிய காமடி.. இதுக்கேல்லாம் வைத்தியம் இருக்கு பாஸ்.. ஒரு எலுமிச்சை எடுத்து நல்லா உச்சியிலே தேய்ச்சி குளுங்க பாஸ்.. தெளிஞ்சிடும்.. அல்லது அன்வார் பிரதமரா வரட்டும்.. சும்மா அப்படித்தான் எல்லாரும் தெளிஞ்சிருவிங்க..
தன் அதிகாரத்தின் தலைமையில் நடந்த இப்படிப் பட்ட ஒரு அதிகார மற்றும் சட்ட துஷ்பிரயோகம் தெரியாது என்பது கேள்வி கேட்ட அரசாங்க வழக்குரைஞரின் கேள்வியில் தான் குற்றம் இருக்கின்றது. எதை பதிலாக பெற வேண்டும் என்று எண்ணி அதற்கேற்றாற்போல் கேள்வி கேட்டால் எதிர்பார்த்த பதில்தானே வரும். கேள்வி, நடந்தது தெரியுமா அல்லது தெரியாதா என்பதை விட, தன் தலைமையில் நடந்த இத்தகைய ஒரு பெரிய தப்புக்கு தலைவனே தார்மீக பொறுப்பேற்க வேண்டுமா இல்லையா என்று கேட்டிருக்கலாம். அல்லது, இவ்வாறு நடந்த தப்புக்கள் அரசாங்கத்திற்கு தெரிய வந்தபோது குற்றம் புரிந்தவர்கள் மீது குற்றம் சாட்டப்படாமல் ISA – வில் சில ஆண்டுகள் தடுத்து வைத்து பின்னர் விட்ட காரணம் என்ன என்றும் கேட்டிருக்கலாம், அதுவும் தப்பு நடந்த கால கட்டத்தில் இவனே சில ஆண்டுகள் உள்துறை அமைச்சராகவும் இருந்ததால். சாட்சியின் வாயில் இருந்து உண்மையை வரவழைக்க பல வழிகள் உண்டு, வேண்டுமென்றால். அதுவும் இவனைப் போன்றோர் வாயில் இருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்றால் அந்த சிவப்பெருமானே வழக்காட வர வேண்டும்!
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது …!
கல்லுக்கு மனிதம் கிடையாது ….!
அய்யாமார்களே, அம்மாமார்களே நம்ம முன்னாள் பிரதமர் மகாதீர் இருக்கிறாரே..அவருக்கு பொய் பேச வராது.பொய் என்றால் என்ன என்றே தெரியாது. அது என்ன? எந்த கடையில் விற்கிறது? கிலோ என்ன விலை என்று கேட்பார். வாழைப் பழத்தோலைக் கூட உரிக்கத் தெரியாது. மூன்று துணைப் பிரதமர்களை பதவி விலக்கத் தெரியும். நாட்டுக்காக ரத்தம் சிந்திய சமுதாயத்தை சிறுபான்மையினர் என்பதற்காக ஓரம் கட்டத் தெரியும்
ஓசிப் பிழைப்புப் பிழைப்பவன் எல்லாம் கடைசியில் இப்படித்தான் பேச வேண்டிய நிர்ப்பந்தம்! இதில் கவலைப்பட என்ன இருக்கிறது!
பொய்லே பிறந்த , பொய்லே வளர்ந்தா அரசியல் தலைவரடா இவர்.
அந்த காலத்தில வானொலியில கலபடம்முன்னு ஒரு நிகழ்ச்சி , அதுல ஸ்டான்லியும் – கோயாவும் நகைச்சுவை பண்ணுவாங்க ! அவ்வளவு தமாஷா இருக்கும் . அதையும் மிஞ்சிடாறு நம்ம கோயா குட்டி ! இ மலபாரி வல்லாத கில்லாடி அல்லே !!!!!
என்ன செய்வது நல்ல தம்பி.. அவனுக்கும் தமிழன் ரத்தம் ஓடுது.. அதனாலதான் தமிழன் கிட்டேயே பாயரான்..