தலைமையாசிரியர் மன்னிப்பு: பொய் சொல்வது யார்?

1 hmஉங்கள் கருத்து ‘கண்ணியமற்ற, நேர்மையற்ற அந்தத் தலைமையாசிரியரை மன்னிப்பு கேட்கும்படி மாநிலக் கல்வித் துறை பணிக்க வேண்டும்’.

மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் தலைமை ஆசிரியர்

டான்:  எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா  தலைமை ஆசிரியர் முகம்மட் நாசிர் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். ஆனால், மலேசியன் தமிழன் டுடே அமைப்பின் செயலாளர் கே.குணசேகரன், தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டார் என்று அதற்குமுன் அறிவித்திருந்தார்.

அப்படியானால், பொய் சொல்வது யார்?

லூர்துசாமி: கண்ணியமற்ற, நேர்மையற்ற அந்தத் தலைமையாசிரியரை மன்னிப்பு கேட்கும்படி மாநிலக் கல்வித் துறை பணிக்க வேண்டும். ஒரு ஆசிரியர்போலவா நடந்துகொள்கிறார். பெர்காசா உறுப்பினர்போல் அல்லவா பேசுகிறார்.

முஸ்லிம்-அல்லாத மாணவர்களைக் குளியலறையில் உணவருந்துமாறு கூறி இருந்தால் அந்த மடத்தனத்துக்காக மன்னிப்பு கேட்பதில் என்ன, ஐயா, சிரமம்?

நியாயவான்: தேசிய இணைக்கத்துக்கும் தேசிய ஒற்றுமைக்கும் ஆப்பு வைப்பவர்கள் முகம்மட் நாசிர் போன்றவர்கள்தான்.

ஏசிஆர்: ஒரு அம்னோ உறுப்பினர் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர்களுக்கு  ‘துவான்கள்’ என்ற நினைப்பு. பேசாமல் பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். அதே வேளை தலைமையாசிரியருக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக சிவில் வழக்கு தொடுக்க வேண்டும். போலீஸ் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.

ஆத்திரம் கொண்டவன்: முகம்மட் நாசிர் சமுதாயத்துக்கும் ஆசிரியர் தொழிலுக்கும் ஓர் இழுக்கு.

பினாங்கிலிருந்து:  மன்னிப்பு கேட்க மனம் இல்லாத ஒருவரை ஏன் வற்புறுத்த வேண்டும். பேசாமல் பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

மேபிவெல்: பெற்றோர் அல்லது  பிள்ளைகள்  தப்பு செய்யவில்லையே. பிறகு ஏன்,  பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்?

மாமாடியாஸ்: தலைமையாசிரியரும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு மிரட்டல் விடுத்த என்ஜிஓ-களும் மன்னிப்பு கேட்க வேண்டும். பிள்ளைகளைப் படிக்க விடுங்கள், ஐயா.