பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைவருமான லிம் குவான் எங், சிறையில் உள்ள இண்ட்ராப் தலைவரைச் சந்திக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்.
உதயகுமாரைச் சந்திக்க சிறைத்துறை தலைமை இயக்குனர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார் என்பதால் உள்துறை அமைச்சரிடம் முறையீடு செய்துகொள்ளப்போவதாய் அவர் தெரிவித்தார்.
அவரின் விருப்பத்துக்குப் பின்னே அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூறப்படுவதை லிம் மறுத்தார்.
“எனக்கும் சிறை அனுபவம் உண்டு. மனிதாபிமான முறையில்தான் உதயகுமாரைச் சந்திக்க விரும்புகிறேன்”, என்றவர் கூறினார்.
எல்லாம் பயம் தான்.. அண்ணன் அங்கே.. தம்பி இங்கே என்று ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்திருப்பார்கள்.. மறுத்துவிட்டார்கள்.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..
ஐயா லிம் அவர்களே! உதயகுமார் வெளியே இருக்கும்போது, உங்களது அல்லக்கைகளான குலசேகரன்,ராமசாமி போன்றோர், அவரை வசைப்படாத நாளே கிடையாது. “அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா” என்று நீங்கள் கூறுவது என் காதுகளில் விழாமலில்லை. ஜ,சே.க.வின் மத்திய நிர்வாக தேர்தல் வந்துவிட்டதால், உதயகுமாரின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் [இந்தியர்கள்] ஜ.சே.க வில் இருப்பதால், அந்த ஆதரவு வாக்குகளுக்காக உதயாவை நாடி தலை தெறிக்க ஓடுவது எங்களுக்கு தெரியாமலில்லை. கட்சியில் வர வர உங்கள் செல்வாக்கு மங்குகிறது என்பதற்கு இந்த சம்பவமே தக்க சான்று. பாரிசானில் வேதமூர்த்தி துணையமைச்சர். ஜ.சே.க வில் பினாங்கு மாநிலத்திற்கு அடுத்த துணை முதல்வர் உதயாவாக இருக்குமோ? யார் கண்டது.
உதயகுமாரைச் சந்திக்க வேண்டாம், அப்படி சந்தித்தால் தமிழ் சமுதாயம் உங்களை அரை குறையாக எடை போடுவார்கள்!!!!!
சந்திப்பில் நன்மை உண்டாக சாத்தியம் உண்டு.
இந்திய நலனுக்காக போராடிய உதயா உள்ளே.இந்தியர்களை நம்பி எதுவும் செய்ய முடியாது என்றாகி விட்டது.மீண்டும் மா இ கா விடமே சரணடைய வேண்டியுள்ளதை நினைக்கும் பொது..
என்னதான் இருந்தாலும், சீனர்களுக்கு இருக்கும் அரசியல் நுணுக்கம் மற்றும் நாகரீகம் தமிழர்கள் இடையே இல்லவே இல்லை.. சீன தலைவர்கள் தப்பு செய்தால், சீன மக்கள் தட்டி கேட்பார்கள். நாம் தட்டி கொடுப்போம்…அதுதான் வித்தியாசம்..