சில தரப்புகள், பள்ளிகளில் நடப்பனவற்றையெல்லாம் இன விவகாரங்களாக மாற்ற முயல்கின்றன என்று கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸோ குற்றம் சாட்டியுள்ளார்.
எஸ்கே பிரிஸ்தானா குளியலறை விவகாரம் பற்றியும் ரவாங்கில் ஒரு இந்திய மாணவனை ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படும் விவகாரம் பற்றியும் கருத்துரைத்த அமைச்சர், சமுதாயத்துக்கு மன்னிக்கும் மனம் வேண்டும் என்றார்.
“மலேசியா ஒரு பல்லின நாடு என்பதால் மன்னிக்கும் மனம் கொண்ட சமுதாயமாக நாம் விளங்க வேண்டும். ஒரு தவறு நடந்துவிட்டால் மலேசிய வழியில் அதற்குத் தீர்வு காண வேண்டும். அதை ஊதிப் பெரிதாக்கக் கூடாது. அதனால் யாருக்கும் பயனில்லை……மன்னிக்கவும் மறக்கவும் தெரிந்திருக்க வேண்டும்”, என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
யோவ் முதல உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்குக்கும் மன்னிப்போம் மறப்போம் என்பது தெரியுமா ? JOHOR பள்ளிவாசல் என்ன ஆட்சி
மல்லாந்து படுத்து யோசி .
மன்னிப்போம் மறப்போம் சரி , ஆனா இது ஒரு தவறே இல்லை , நான் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் ? யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று கூறும் உம்முடைய மாங்கா மண்ட தலைமை ஆசிரியரிடம் போய் பாடம் நடத்துங்கள். அவன்தான் தலை கணம் பிடித்து பேசுகிறான் !
நாங்கள் செய்தால் அது பெரும் தவறு.. சட்டம் தன் கடமையை செய்யும்.. நீங்கள் செய்தால் அது எதிர்பாராமல் நடந்து விட்டது.. மன்னிப்போம், மறப்போம்.. என்ன கொடுமை சார் இது..
இந்த அரைவேக்காட்டு கல்வி அமைச்சர் கூறுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இனத்துவேஷத்தை கக்கியே வாக்குகளை சேகரித்து அம்னோ தேர்தலில் வெற்றிப் பெறுவது இந்த இனவெறியர்களின் வழக்கமான செயல். இன உணர்சிகளை தூண்டியே கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளனர்.
மாணவன் தவறு செய்தால் கண்டிக்கவேண்டும் டான். கண்டிப்பதில் குற்றம் இல்லை. அனால் நாக்காளியை கொண்டு அடித்தது மிக தவறு. மன்னிக்கும் மனம் எங்களுக்கு சொல்லிதரவேண்டம். அது எங்களிடம் நிறைய உண்டு. இதில் இனம் சார்ந்தது இல்லை. அது யாராக இருந்தால் என்ன. நாக்காளியை கொண்டு தாக்கியது மிக மிக தவறு. பள்ளி ஆசிரியர் என்ன மிருகமா? அறிவில்லை? இதை கேட்டால் தவறா? இது ஒரு தொடர்கதையா இருக்கு. அண்த ஆசிரியருக்கு தகுந்த தண்டனை தரவேண்டும். அப்போதான் மற்ற ஆசிரியருக்கு ஒரு பாடமாக இருக்கும். ஓஹ்வொரு தடவையும் எங்களையே குற்றம் சொன்னால் எப்படி? உங்கள் பிள்ளையை இப்படி அடித்தால் நீங்கள் விடுவீரா? இதில் எந்த இனம் என்று கிடையாது? யாராக இருந்தால் என்ன? மன்னிப்பு கேட்க சொல்? பிறகு இடம் மாற்றம் செய்? அதை விடுத்தது எங்களை குற்றம் சொல்லாதே?
ஸ்ரீ பிரிஸ்டன பள்ளி விவகாரத்தை வைத்து அம்னோவில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் இந்த அமைச்சர் .ஒரு அமைச்சரே இப்படி இன வெறியோடு இருந்தால் நாடு எப்படி உருப்படும்.நாட்டில் அவ்வப்போது இன விவகாரத்தை துண்டி விடுபவர்கள் அம்னோவை சேர்ந்த தலைவர்களும் , அதே கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் தான்.ஆனால் ஆட்சி அதிகாரம் இது நாள் வரையில் இவர்களிடம் இருப்பதால் இவர்கள் நாட்டில் இன ஒற்றுமையை சீர் குலைபவர்கள் எதிர் கட்சியினர் என்று தொடர்ந்து பொய்யை பரப்வருகின்றனர் .டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் சுசோ , தெங்கு அட்னான் , தன் ஸ்ரீ முயிட்டின் , டத்தோ ஸ்ரீ சஹிட் ஹமிடி போன்றவர்களின் மூலதனமே இன வெறி தான்.இவர்களை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவது நமது கடமையாக கொண்டு நாம் செயல் படுவோம் வாரீர்.
இப்படி பேசியதற்காக, அமைச்சரே, உங்களை நான் மன்னித்து விட்டேன்! இதை இன விவகாரமாகப் பார்க்க வேண்டாம்!