அம்பாங்கையும் பாண்டானையும் சேர்ந்த 15 குடியிருப்பாளர்கள், நீர் விநியோகத் தடையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சபாஷ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரி பயனீட்டாளர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார்கள்.
கடந்த டிசம்பரிலும் இவ்வாண்டு ஆகஸ்டிலும் நீர் விநியோகத்தில் பெருமளவு தடங்கல் ஏற்பட்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.
1999ஆம் ஆண்டு பயனீட்டாளர் சட்டத்தின்கீழ் அவர்கள் இழப்பீடு கோருவதாக பிகேஆரின் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி கூறினார்.
அவர்கள், தண்ணீர் தடைப்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரிம50 இழப்பீடு கோருகிறார்கள்.
சபாஸ் சரியான நெத்தியடி! குடி நீர் விநியோகம் பாதிப்புக்கு அம்பாங் பாண்டான் பகுதி மக்கள் சபாஸ் நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முன் வந்திருப்பது பாராட்டக்கூடியாது. அதுப்போல் மற்ற பாதிக்கப் பட்ட பகுதி மக்களும் முன் வர வேண்டும்?
இவர்களை நீதிமன்றத்திற்கு அவசியம் இழுக்க வேண்டும். திறமையற்றவர்களை வேலையில் வைத்துக் கொண்டு மக்களைப் பழி வாங்கும் இவர்களை அவசியம் நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும்.