ஆட்சிக்குழு: அனுமதி தேவையில்லை; சிலுவையை அது இருந்த இடத்திலேயே மீன்டும் வைக்க வேண்டும்

crossreturnedwongகடந்த ஞாயிற்றுக்கிழை தாமான் மேடான் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிஜே தேவாலயம் அதன் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிலுவையை அகற்றியது. இன்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு அந்த சிலுவையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளது.

வழிபாட்டு தலங்கள் எவ்வித அனுமதியும் இன்றி வாணிபத்திற்கான கட்டடங்களிலிருந்து செயல்படுவதற்கு permit2008 ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவிடம் தெரியப்படித்திருக்க வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான எலிசபெத் வோங் கூறினார்.

” இது போன்ற அரசியல் சார்ந்த தீவிரவாதிகளின் கும்பல் வன்செயல்முறையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலுவையை அது முதலில் இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு நாங்கள் தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளோம்.”, என்று எலிசபெத் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

எலிசபெத் வோங் மாநில இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஆவார்.