பகாங் மாநிலத்தில் மருத்துவர் பற்றாக்குறை

பகாங் மாநிலத்தில் உள்ள பல சுகாதார மையங்களில் மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதற்கு, மருத்துவர்கள் உயர் சிறப்புப் பயிற்சி பெறுவது போன்ற காரணங்களே முக்கியக் காரணம் என்று பகாங் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலுள்ள பிற மருத்துவமனைகளில் நிரந்தரப் பணிகளுக்காக அதிகாரிகள் மாநிலத்தை விட்டு வெளியேறுவது, மற்றும் அவர்களின் ராஜினாமாக்கள் ஆகியவையும் இந்த மருத்துவப் பற்றாக்குறைக்குக் வழிவகுத்துள்ளதாக அது கூறியுள்ளது.

மேலும், ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி, பகாங் மாநில சுகாதார மையங்களில் உள்ள மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை 850 ஆக உள்ளது என்று அத்துறை தெரிவித்துள்ளது.

பகாங் மாநிலத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவது குறித்து சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட புகார்களை சுகாதாரத் துறை கவனத்தில் கொண்டுள்ளது.

பொதுச் சுகாதாரச் சேவை தடையின்றியும் சீராகவும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தற்போது இருக்கும் மனிதவளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவது (Optimising existing human resources) உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளைத் துறை எடுத்துள்ளது என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில், கிளஸ்டர் மருத்துவமனை முன்முயற்சி மூலம் பொதுச் சுகாதார மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ அதிகாரிகளைத் திரட்டுவது, அத்துடன் சேவைத் தேவைகள் மற்றும் பணிச்சுமையின் அடிப்படையில் மருத்துவர்களின் இடவமைப்பை மறுசீரமைப்பது ஆகியவை அடங்கும்.

 

 

 

 

-fmt