ஹில்மி அப்துல்லா கூறுகையில், இந்தக் கொள்கை மாநிலத்தின் ரேபிஸ் தடுப்பூசி உத்தரவுக்கு ஏற்ப உள்ளது.
தாய்லாந்திலிருந்து நாய்கள் எல்லையைக் கடந்து வருவதற்கான சாத்தியம் இருப்பதால், வெறிநாய் (Rabies) நோய் பரவும் அபாயத்தை கிளந்தான் மாநிலம் எதிர்கொள்கிறது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா தெரிவித்தார்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்திற்குள் வெறிநாய் (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்தப்படாத நாய்களை, ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக கெலந்தான் மாநில உள்ளாட்சி அதிகாரிகள் கொன்று அகற்றலாம் என்று மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாநில உள்ளாட்சி, வீடமைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஹில்மி அப்துல்லா கூறுகையில், இது மாநிலத்தின் ரேபிஸ் தடுப்பூசி உத்தரவுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. அந்த உத்தரவின்படி, நாய் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் தங்கள் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
பெர்னாமா செய்தி நிறுவனம் அவரை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவலின்படி, தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒவ்வொரு நாய்க்கும், உள்ளாட்சி மன்றத்தில் உரிமம் பெறுவதற்கு முன்பு, எண் குறிப்பிடப்பட்ட உலோக அடையாளக் குறி வழங்கப்படும்.
தாய்லாந்திலிருந்து நாய்கள் எல்லையைத் தாண்டி வரக்கூடும் என்பதால், கெலந்தானும் ரேபிஸ் பரவும் அபாயத்தை எதிர்கொள்கிறது என்று ஹில்மி தெரிவித்தார்.
கடந்த மாதம் கெடா மாநிலத்தின் குபாங் பாசுவில் பதிவான ரேபிஸ் மரணம் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் கெலந்தானில் ஒரு குழந்தையைத் தெருநாய் தாக்கிய சம்பவம் ஆகியவை, இந்த கொடிய நோயின் ஆபத்தை நினைவூட்டுவதாக அவர் கூறினார்.
தெருநாய்களைப் பிடிப்பதற்காக உள்ளாட்சி மன்றங்கள், கால்நடை சேவைகள் துறையுடன் இணைந்து அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை அடையாளம் காணப்பட்ட ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளன.
“இந்த ஆண்டு பச்சோக்கில் 21 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 நாய்களிடமிருந்து ரேபிஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.























