மலாக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவரை இறக்கிவிட்ட பிறகு, அந்தக் குடும்பம் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தங்காக் துணைக் காவல்துறைத் தலைவர் ஜமலுல்கமால் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
தங்காக் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய பாதையில் கிலோமீட்டர் 159.6-ல் இன்று சாலையை விட்டு விலகிச் சென்ற பல்நோக்கு வாகனம்(மேலே)
இன்று பிற்பகல் ஜொகூர், தங்காக் அருகே உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிய பாதையில் 159.6-வது கிலோமீட்டரில், பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், இரண்டு வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் மூவர் காயமடைந்தனர்.
மலாக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவரை இறக்கிவிட்டு, நிசான் செரீனா (Nissan Serena) ரக பல்நோக்கு வாகனம் ஜொகூர் பாருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது பிற்பகல் 1.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தங்காக் துணைக் காவல்துறைத் தலைவர் ஜமெல்லுல்கமால் அப்துல் ஹலிம் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்த வாகனம் சாலையின் இடதுபுறமாக விலகிச் சென்று தடுப்புக் கம்பியில் மோதியது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
“இந்த விபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த 49 வயதுப் பெண், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 14 வயதுச் சிறுவன் மற்றும் இரண்டு வயதுச் சிறுவன் ஆகிய மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
“காயமடைந்த வாகன ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் சிகிச்சைக்காக மூவாரில் உள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூவரின் உடல்களும் தங்காக் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஜமெல்லுல்கமால் தெரிவித்தார்.























