இந்த விலைகள் டிசம்பர் 2ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
நாளை முதல் RON97 பெட்ரோல் மற்றும் மானியமற்ற RON95, டீசல் ஆகியவற்றின் விலைகள் 25 சென் குறையும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
RON97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரிம 3.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மானியமற்ற RON95 மற்றும் டீசல் ஆகியவை முறையே லிட்டருக்கு ரிம 3.47 மற்றும் ரிம 4.47 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு ரிம 1.99 ஆகவும், BUDI டீசல் திட்டத்தின் கீழ் டீசல் லிட்டருக்கு ரிம 2.10 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
மானியப் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானியப் பெட்ரோல் லிட்டருக்கு ரிம 2.05 ஆகவும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் லிட்டருக்கு ரிம 2.15 ஆகவும் நீடிக்கும்.
இந்த விலைகள் டிசம்பர் 2 வரை அமலில் இருக்கும்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களையும் வணிகங்களையும் பாதுகாக்க மத்திய அரசு தொடர்ந்து மானியங்களை வழங்கும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“2027 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் வகையில், அடுத்த ஆண்டு எரிபொருள் மானியங்களுக்காக ரிம 40 பில்லியன் செலவிட அரசாங்கம் எதிர்பார்க்கிறது,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.























