திமிராக பேசிய இலங்கை அமைச்சரிடம் விசாரணை; ராஜபக்சே உத்தரவு

நிருபர்களின் கை கால்களை உடைப்பேன் என திமிராக பேசிய இலங்கை அமைச்சரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு குடியரசுத் தலைவர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு அந்நாட்டு அமைச்சர்கள் அடாவடி பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மேர்வின் சில்வா என்பவர் வெளிநாடுகளில்…

அதிமுகவில் மீண்டும் சசிகலா; பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நீண்ட நாள் தோழி சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து  நீக்கப்பட்டார். போயஸ்கார்டனில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். அவருடன்  கணவர் நடராஜன்,  உறவினர்கள் ராவணன்,  திவாகரன் உள்பட 14 பேர் அ.தி.மு.க.வில் இருந்து  நீக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.…

ரஷ்யாவில் இந்து கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்து ‌கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1992-ஆம் ஆண்டு பெடரல் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இப்பகுதியில் கோவிலை கட்டுவதற்கு நில உரிமையாளரிடம் 49 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டு‌களே முடிவடைந்துள்ள நிலையில்…

முதல் செயற்கை கோளை விண்ணில் ‌செலுத்துகிறது வங்க தேசம்

வரும் 2015-ஆம் ஆண்டில் அமெரி்க்க நிறுவனத்தின் துணையுடன் வங்க தேசம் தன்னுடைய முதல் செயற்கை‌ ‌கோளை விண்ணில் செலுத்த உள்ளது. வங்க தேச டெலிகம்யூனிகேசன் ஒழுங்குமுறை ஆணையம் முதல் கட்டமாக 10 மில்லியன் டாலர் மதிப்பில் அனைத்துலக ஒப்பந்தம் செய்யஉள்ளது. இது குறித்து ஸ்பேஸ் பாட்னர்ஷி்ப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின்…

உதயகுமாருக்கு மக்கள் கூட்டணி தொகுதி கொடுக்க வேண்டும்!

இந்தியர்கள் அதிக வாக்காளர்களாக உள்ள ஒரு தொகுதியை உதயகுமாருக்கு கொடுத்து மக்கள் கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், மனித உரிமை கட்சியின் தலைவரும், இண்ட்ராப் அமைப்பின் தலைவராகவும் உள்ள உதயகுமார் தேர்தலில் நின்றால் ஆதரிப்பீர்களா? என்ற…