சீனாவுக்கு ரகசியங்களை காட்டிக் கொடுத்த ரஷ்ய விஞ்ஞானி

ரஷ்ய உயர்மட்ட அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர், இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தேசத்துரோக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார், சீனாவுக்கு ரகசியங்களை காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக, வழக்கை நன்கு அறிந்த இரண்டு பேர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். சைபீரியாவின் கிறிஸ்டியானோவிச் இன்ஸ்டிடியூட் ஆஃப் தியரிட்டிகல் அண்ட் அப்ளைடு…

உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் – 5 கண்காணிப்பு…

உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி அதன் 5 கண்காணிப்பு நிலைகளை ரஷியா அழித்தது. ரஷியா-உக்ரைன் போர் ஏற்பட மிக முக்கிய காரணம் அதன் புவியியல் அமைப்பு ஆகும். அதாவது உக்ரைன் ஒரு புறம் ரஷியாவையும், மற்றொரு புறம் ஐரோப்பிய நாடுகளையும் எல்லைகளாக கொண்டுள்ளன. இதில் உள்நாட்டு…

கயானாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள்…

கயானாவில் உள்ள பள்ளி விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 19 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். தென் அமெரிக்க நாடான கயானாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மஹ்தியா நகரில் அரசு பள்ளி விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு ஆண்கள், பெண்கள் என 30க்கும்…

இத்தாலியின் மவுண்ட் எட்னாவில் தீப்பிழம்பை கக்கும் எரிமலை- விமான சேவைகள்…

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது. தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 3,330…

எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் –…

எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு தற்போது சால்வடார் லீக் கால்பந்து நடைபெற்று வருகிறது. இதன் கால்…

உக்ரைனுடன் போர் பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷிய படை அறிவிப்பு

பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய பக்முத்தை…

ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலுக்கு எதிராகப் பன்றிகளுக்குத் தடுப்பூசியை உருவாக்கும் இந்தோனேசியா

இந்தோனேசியாவின் ஆகப்பெரிய பன்றிப் பண்ணையில் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பன்றிகளுக்குத் தடுப்பூசியை அந்நாடு உருவாக்குகிறது. அது பன்றிக் காய்ச்சல் கிருமிக்கு எதிராகப் பன்றிகளுக்குத் தற்காலிக நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் என்று நம்பப்படுகிறது. ரியாவ் தீவுகளில் (Riau Islands) உள்ள புலாவ் புலான் (Pulau Bulan)…

செயற்கைக் கால்கள் கொண்ட முன்னாள் ராணுவ வீரர் எவரெஸ்ட் சிகரம்…

முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்றை படைத்தார். 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார். பிரித்தானிய முன்னாள் ராணுவ வீரர் தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான…

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 3 பேருக்கு…

அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு ஈரான் அரசாங்கம் தூக்குத்தண்டனையை நிறைவேற்றி உள்ளது. ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. 3 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசார்…

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர்…

ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, அமெரிக்க அதிபர் ஜோபைடன்…

ஜப்பானில் ஜி-7 உச்சி மாநாடு: ரஷ்யா மீது கூடுதல் தடை…

ஜப்பானில் நடக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் மே 19 - 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா,…

கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 7…

தங்கம் வெட்டி எடுக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் அதேவேளையில் உள்ளூர் மக்கள் சிலர் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள்.…

சூடான் உள்நாட்டுப் போரில் கர்ப்பிணி பெண்கள் சிக்கித் தவிப்பு

சூடானில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக அங்கு இளம் பெண்களும் , கர்ப்பிணி பெண்களும் தீவிர நெருக்கடியில் சிக்கி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 20 ஆண்டுகால வன்முறைச் சுமைகளை பெண்கள் சுமந்து வருகின்றனர். ஏப்ரல் 25, 2003 அன்று சூடானில் டார்ஃபர் மோதல் ஏற்பட்டதில் சூடான்…

வடக்கு இத்தாலியில் கனமழை, வெள்ளத்தால் 9 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர்…

வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கனமழையால், கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவுகளால் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். பல ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என்றும்,,…

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் துருக்கியில் வரும் 28ம் தேதி…

துருக்கி அதிபர் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெற உள்ளது. துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த…

உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து உறுதி

ஜெலெனஸ்கி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பின் போது உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க உறுதியளிக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக மேற்கத்திய தலைவர்களை சமீப நாட்களாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்து வருகிறார். தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பதற்காக,…

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மனநல பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம்

உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன.…

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம்

போர் நிறுத்தத்துக்கு வரவேற்பு அளிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் கூறி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.…

தாய்லந்துப் பொதுத் தேர்தல் – அதிகமான இடங்களை வென்றுள்ள எதிர்க்கட்சிகள்

தாய்லந்து நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்தரப்பு Move Forward கட்சியும், Pheu Thai கட்சியும் ஆக அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. 14 மே தாய்லந்தில் தேர்தல் நடந்தது. சில இடங்களில் சூறாவளியால் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. எனினும் அதற்கு முன்பாக 97 விழுக்காட்டு வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. தாய்லந்தில்…

மொக்கா புயல்; கடும் பாதிப்பை சந்தித்த மியான்மர் மற்றும் பங்களாதேஷ்

மொக்கா புயலினால் மியான்மரின் துறைமுக நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் புயலினால் நாட்டின் தகவல் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் 'மொக்கா' நேற்று (மே 14) தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதிதீவிரப்…

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக சட்டம் இயற்றிய கலிபோர்னியா

இன பாகுபாடுக்கு எதிரான சட்டத்தை இயற்றிய முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் இன பாகுபாடு என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. சமீப காலமாக அங்கு இனவெறி தாக்குதல் அதிகமாக அரங்கேறுகின்றன. reen இந்த நிலையில் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை…

பாகிஸ்தான் – அதிகாரப் போட்டியில் அழியும் பொருளாதாரம்

கடந்த சில மாதங்களில் வேகமான வீழ்ச்சியை சந்தித்து வருகிற அந்த நாட்டுப் பொருளாதாரம், உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் உதவினால் மட்டுமே, ‘திவால்’ நிலையில் இருந்து மீள முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத்…

இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் – இஸ்லாமாபாத் நீதிமன்றம்

இம்ரான் கானுக்கு அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இம்ரான் கானை…