இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை கைவிடும்படி கூறியதால் ராணுவ மந்திரியை பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு பதவி நீக்கம் செய்தார். இதை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு…
ஈரானில் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம் வைத்த மத…
ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது.…
தைவானுக்குக் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பத் திட்டமிடும் அமெரிக்கா
தைவானில் இன்னும் கூடுதலான அமெரிக்க ராணுவ வீரர்களைப் பணியமர்த்தத் திட்டமிடப்படுகிறது. சீனாவுடனான பதற்றம் அதிகரிக்கும் வேளையில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வரும் மாதங்களில், தைவானில் அமெரிக்கத் துருப்பினர் 200 பேர்வரை பணியமர்த்தப்படலாம் என்று வால் ஸ்ட்ரீட் நாளேடு தெரிவித்தது. கடந்த ஆண்டு தைவானில், அமெரிக்கத் துருப்பினர் 30 பேர்…
சவுதியை தொடர்ந்து இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த ஓமன்…
இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழவி வந்த மோதல் போக்கு மெல்ல மெல்ல தணிந்து வருகிறது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், சூடான், மொராக்கோ போன்ற அரபு நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தமும், தூதரக உறவை தொடங்கவும் ஒப்பந்தம் செய்துகொண்டது. இது இஸ்ரேல்-அரபு…
அணுவாயுதங்கள் வேண்டாம், சமரசப் பேச்சில் ஈடுபடுங்கள் – ரஷ்யா, உக்ரேனிடம்…
உக்ரேனையும் ரஷ்யாவையும் உடனடியாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமெனச் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்ய-உக்ரேன் போரின் ஓராண்டு நிறைவு இன்று (24 பிப்ரவரி) அனுசரிக்கப்படும் நிலையில் அது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ரஷ்யாவும் உக்ரேனும் ஒரே இலக்கை நோக்கிச் செயல்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்கவேண்டும், என்று அது குறிப்பிட்டது. பூசலில் அணுவாயுதங்களைப்…
வட அமெரிக்காவை வதைக்கும் கடும் பனிப்புயலால் விமானச் சேவைகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவிலும் கனடாவிலும் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் வட அமெரிக்காவில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் தடைபட்டன. அதனால் ஆயிரக் கணக்கான பயணிகள் பயணத்தைத் தொடரமுடியாமல் தவிக்கின்றனர். கனடாவில் கடுங்குளிருக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெயில் அதிகம் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles)…
ரஷியாவால் உக்ரைனை வீழ்த்த முடியாது – ஜோ பைடன் உறுதி
ரஷியாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிபட தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷியா போர் நாளை (வெள்ளிக்கிழமை) ஓர் ஆண்டை நிறைவு செய்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர்…
பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான், 700 மில்லியன் டாலர் கடன்…
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது. மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது. அதேவேளை, பொருளாதார…
ரஷ்யா அமெரிக்காவுடனான அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்து தற்காலிக விலகல்
ரஷ்யா, அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறது. அதன் தொடர்பில் பலதரப்பினர் அக்கறை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவும் ரஷ்யாவும் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் முழுவீச்சில் பின்பற்றவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது. ரஷ்யா அந்த அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்த தற்காலிகமாக விலகியது குறித்து நேட்டோ கூட்டணித்…
அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் – பச்சிளம்…
ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் சிக்கி பச்சிளம் குழந்தை, பிஷப் உள்பட 17 பேர் பலியாகினர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தநாள் அங்கு ஜனாதிபதிகள் தினம் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3-வது திங்கட்கிழமை…
நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மக்கள் கிளர்ச்சியால் பதற்றம்
ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நைஜீரிய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் 200 நைரா, 500 நைரா, 1000 நைரா நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களது ரூபாய்…
பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி
பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேசிலில்…
உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி – ஜப்பான்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் அறிவித்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால்…
துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 3 பேர் பலி –…
துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம்…
சீனாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரை காணவில்லை
சீனாவில் கோவிட் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருமளவிலான எதிர்ப்பாளர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து…
மின் உற்பத்தியில் பாதிப்பு: இருளில் மூழ்கியது கியூபா
நாடு முழுவதும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் கியூபாவின் 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியது. கரிபீயன் தீவுநாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின்உற்பத்தி நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதனால் அந்த மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு தழுவிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு…
எங்களது பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வில்லை: பாகிஸ்தான் பாதுகாப்புத்…
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவஜா ஆசிப் தெரிவித்துள்ளார். சியால்கோட் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் கூறியதாவது. நாடு கடனை செலுத்த தவறி விட்டது. இதற்கு, அதிகாரிகள், நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவரும்…
சிரியாவில் தாக்குதல் 53 பேர் பலி; ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு…
சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், "அல்-சோக்னா நகரின் தென்மேற்கில் உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ் பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. இதில் 53 பேர்…
உக்ரைன் போர்: ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம்…
உக்ரைன் போரில் ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம் அடைந்து உள்ளனர் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போர் 360-வது நாளை எட்டி உள்ளது.…
கராச்சி காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – 5 பயங்கரவாதிகள், 4…
பாகிஸ்தானில் தலைமை போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள், 4 போலீசார் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் புகுந்து கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு…
பல்கேரியா: கைவிடப்பட்ட சரக்கு லாரி கண்டெய்னரில் 18 ஆப்கானிய அகதிகள்…
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.…
பிலிப்பைன்ஸ் கவர்னர் மீது துப்பாக்கிச்சூடு – பாதுகாவலர்கள் 4 பேர்…
பிலிப்பன்சில் கவர்னரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் உள்ளன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் லனொ டி…
உக்ரைன் போரில் பலூன்களைக் களமிறக்கியுள்ள ரஷ்யா
உக்ரைன் போரில் ரஷ்யா தனது படையெடுப்புக்கு வலுச்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ரஷ்யா பலூன்களைக் களமிறக்குவதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது. தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு பொருள்களை தனது ஆகாயப்படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் குறிப்பிட்டுள்ளது. நிலத்திலிருந்து ஆகாயத்துக்குத் தாக்குதல் முறையை மாற்றி தனது ஆயுத பலத்தைக் குறைக்க மாஸ்கோ…
சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின் 200 மில்லியன் பேருக்கு கொரோனா
சீனாவில் 200 மில்லியன் பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த நவெம்பர் மாதத்திலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமையவே 200 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 8 இலட்சம் பேரின் நிலைமை…