ரஷ்யாவில் தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களுக்கு தடை

தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களை தடை செய்து ரஷ்ய நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தன்பாலின உறவை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்களும் தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அநாட்டில் தன்பாலின உறவாளர்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்படவும், வழக்குக்கு உள்ளாவாகவுமான நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவு தொடர்பாக விமர்சனங்கள் வலுத்து வரும் சூழலில், ரஷ்ய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பாரம்பரியத்தில் இல்லாத பாலியல் உறவுகளை தடை செய்து, அவற்றை சட்டவிரோதமாக அறிவிப்பதோடு பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சைகளையும் சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு ரஷ்ய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது.

2024 மார்ச் தொடங்கி அடுத்த 6 ஆண்டுகளுக்கும் ரஷ்ய அதிபராகஇருப்பது தொடர்பான கோரிக்கையை விளாடிமிர் புதின் மக்கள் முன்னிலையில் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், நீண்ட காலமாகவே ரஷ்ய கலாச்சாரத்தைப் பேணும் வகையில் தன்பாலின உறவை தடை செய்வது குறித்துப் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht