ஈராக்கில் வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா

அமெரிக்கா ஈராக்கில் ஆகாயத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக அது அமைந்துள்ளது. காசாவில் நடக்கும் போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதைக் கண்டித்துத் தாக்குதல் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

ஈரானுடன் தொடர்புடைய இயக்கங்கள் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர்.

அதில் 3 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். பதிலடித் தாக்குதல்களில் முக்கியமான சில கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறினர்.

அதில் காத்திப் ஹெஸ்பொல்லா குழுவின் கிளர்ச்சியாளர்கள் சிலர் மாண்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த அக்டோபரில் தொடங்கியது முதல், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவம் குறைந்தது 100 முறை தாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடுமென்ற அச்சத்தை அது ஏற்படுத்தியுள்ளது.

 

 

-sm