உலக அளவில் X சமூக ஊடகத் தளம் சேவை முடக்கம்

சமூக ஊடகத் தளமான X, X Pro ஆகியவை உலக அளவில் சேவைத் தடங்கலை எதிர்நோக்கியுள்ளன.

இணையப்பக்கமான Downdetector.com அந்தத் தகவலை வெளியிட்டது.

ட்விட்டர்  என்று முன்னதாக அழைக்கப்பட்ட Xஇல் உள்ள பதிவுகளைப் பயனீட்டாளர்கள் பார்வையிட முடியாமல் போனது.

அதற்குப் பதிலாக “Xக்கு வரவேற்கிறோம்” எனும் தகவல் அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. X Pro தளத்திலும் அத்தகைய தகவல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

அமெரிக்காவில் 47ஆயிரத்துக்கும் அதிகமானோர் சேவையில் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர்.

 

-ms