ஆஸ்திரேலிய தேர்தல்: கோவிட்-19 தொற்றியோர் தொலைபேசிவழி வாக்களிக்கலாம்

ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் வாக்களிக்கலாம் என்றும் அதற்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆண்டனி…

சுவீடன், பின்லாந்து தலைவர்களுடன் பைடன் சந்திப்பு

வாஷிங்­டன்: உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­து­வ­ரும் நிலை­யில், நேட்டோ கூட்­ட­ணி­யில் சேர சுவீ­டனும் பின்­லாந்­தும் விண்­ணப்­பித்­துள்­ள­தைத் தொடர்ந்து, அந்­நாட்டுத் தலை­வர்­களை அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் சந்­தித்­தார். சுவீ­டன் பிர­த­மர் மெக்­ட­லினா ஆன்­டர்­சன், பின்­லாந்து அதி­பர் சாவ்லி நினிஸ்­டோவை வெள்ளை மாளி­கை­யில் சந்­தித்து நேட்டோ விண்­ணப்­பம் குறித்து திரு…

சரணடைந்த உக்ரைன் இராணுவத்தை எங்கே அனுப்புகிறது ரஷ்யா

மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணுவத்திடம் சரணடந்த உக்ரைனிய இராணுவ வீரர்களில் 900 பேரை ரஷ்யாவின் சிறைக் கொலனிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரும்பு ஆலையில் இருந்து வெளியேறி ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்த 959 உக்ரைனிய இராணுவ வீரர்களில் 51 பேர்…

பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் – இந்தோனேசியா அதிபர் அறிவிப்பு

உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. பாமாயில் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். அதேசமயம் கச்சா பாமாயில் அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்…

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்…

பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த…

சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில்…

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3…

இங்கிலாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தின் விகிதம் அதிகரிப்பு

இங்கிலாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இது உலக அளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இது இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,…

ஃபின்லாந்து, ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை துருக்கி ஆதரிக்காது- அந்நாட்டு ஜனாதிபதி…

ரஷியா, உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் துருக்கியின் கப்பல் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதித்துள்ளது. ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை துருக்கியின் வர்த்தக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான தடை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட சவால்களை…

காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு-…

அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழ் சார்பில் நடத்தப்பட்ட காற்று மாசு உயிரிழப்பு குறித்த புதிய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, உலக அளவில் ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள், மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கள், சரக்கு…

உக்ரைன் அகதிகளுக்கு ஒரு நியாயம், ஆப்ரிக்கா அகதிகளுக்கு ஒரு நியாயமா?

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3வது மாதத்தை எட்டவுள்ளது. இந்த போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவர்களை ஐரோப்பிய நாடுகள் வரவேற்கின்றன. அதே சமயம் ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர் உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அகதிகள் வந்தால் ஐரோப்பிய…

நேட்டோ நாடுகளின் அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்- பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதம்

உக்ரைன்-ரஷியா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும், பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக, ஸ்வீடன் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். பிரதமர்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னை கொல்வதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாட்டிலும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறியது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சியால்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், “என் உயிரை பறிக்க சதி நடக்கிறது. இந்த சதி குறித்து சில நாட்களுக்கு முன்பு…

பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்- அதிபர் இம்மானுவேல்…

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார்.  இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முந்தைய அரசில்…

பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை

பறக்கும் தட்டுக்கள் உண்மையில் இருக்கிறதா, அதில் வேற்றுக்கிரகவாசிகள் பயணம் மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருக்கிறது.  கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 144 புகார்கள் பறக்கும் தட்டுக்கள் குறித்து பதிவாகியுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள்…

பாகிஸ்தானில் சீக்கியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெஷாவர் நகரின் சர்பந்த் பகுதியில் உள்ள பாட்டா டால் பஜாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட இருவரும் அப்பகுதியில் கடைகள் வைத்திருந்த சல்ஜீத்…

புதிய திட்டத்திற்காக உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின்…

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை…

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.  அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக்…

ரஷியாவிற்கு உதவ வேண்டாம்- சீனாவுக்கு ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுவதாக ஜி7 கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷியா தடுப்பதாகவும், இதை சரி செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச…

கார் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி –…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46).  டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார். கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்காக 198…

பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் வழங்கும் ஆசிய வளர்ச்சி…

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிதி நெருக்கடியில்…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத்…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார். இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம்…

டுவிட்டர் வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதற்கான பணியையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், டுவிட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டரில் போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால்,…

வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி: தனிமைப்படுத்தப்பட்ட 1,87,000 பேர்

சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக…