12 பாலஸ்தீனியர்களைக் கொன்று, மேற்குக்கரை மசூதியை இழிவுபடுத்திய இஸ்ரேல் ராணுவம்

வடக்கு காசாவில் உள்ள ஜெனின் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலியபடையினர் செருப்பு கால்களுடன் நுழைந்து பள்ளிவாசலின் புனிதத்தை கெடுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அங்கு நுழைந்த இஸ்ரேலிய வீரர்கள் யூதப் பாடல்களை பாடுவதைக் காட்டும் காட்சிகள் வியாழக்கிழமை வெளிவந்தன.

ஜெனின் மற்றும் அதன் அருகில் உள்ள அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் சமீபத்திய தாக்குதல் செவ்வாயன்று தொடங்கியது, இது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கும் மேலும் பலர் காயமடைந்ததற்கும் வழிவகுத்தது.

வெளியான காணொளியில், பாலஸ்தீனியர்களை வெளியேற்றிய பிறகு, இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் இராணுவ காலணிகளுடன் மசூதியைச் சுற்றி நடப்பது காட்டப்பட்டுள்ளது.

சிப்பாய்களில் ஒருவர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி, யூத பாடல்களைப் பாடி, நகரத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு அதை ஒளிபரப்பினார்.

“முகாமில் வசிப்பவர்களுக்கு, கதை முடிந்துவிட்டது, முகாமுக்குள் ஆயுதம் ஏந்தியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எதிர்காலம் சுத்தமாக இருக்கும், நீங்கள் முகாமில் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அல்லாஹ்வின் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி எதுவும் இல்லை,”என்று இராணுவ வீரர் மேலும் கூறினார்.

 

 

 

-if