100 நாள் சிறையில் இருந்தாலும் போராட்டத்தைக் கைவிடவில்லை உதயகுமார்

1 uthayaஇந்தியர்களுக்காக குரல் கொடுப்பதில் வருத்தமே கிடையாது என்கிறார் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார்.  அதுவும் 100 நாள் கடுமையான சிறைவாழ்க்கையை அனுபவித்த பின்னரும் அவர் அதில் உறுதியுடன் இருக்கிறார்.

தேச நிந்தனை குற்றம் சாட்டப்பட்டு அதற்காக இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் உதயகுமார்  செய்தி ஊடகங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

“காஜாங் சிறையில் உள்ள  இந்த 100-வது நாளில்,  எனது இப்போதைய போராட்டம் குறித்தோ உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (ஐஎஸ்ஏ) 17 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டது பற்றியோ நான் வருத்தப்பட்டதே இல்லை”, என்றவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற பாரதிதாசன் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

 

TAGS: