கடந்த ஆண்டு பெர்சே பேரணியின்போது ஒரு போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காகவும் ஒரு போலீஸ்காரரையும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவரையும் காயப்படுத்தியதற்காகவும் 26-வயது பால்வெட்டுத் தொழிலாளர் ஒருவருக்கு கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 16மாதச் சிறைத் தண்டனையும் ரிம5,500 அபராதமும் விதித்தது.
முகமட் சபுவான் மாமாட் குற்றவாளிதான் என்பதை அரசுத் தரப்பு ஐயத்துக்கிடமின்றி நிரூபித்திருப்பதாக நீதிபதி மஹ்முட் அப்துல்லா கூறினார் என த ஸ்டார் ஆன் லைன் அறிவித்துள்ளது.
ஐயோ பாவம்.. எய்தவன் AC அறையில் எதிரியுடன் தேநிர் அருந்துகிறான்..அம்பாக இருந்தவனுக்கோ 16 மாதம்..
Bersih பேரணியின் போது எவ்வளவோ போலிஸ் காரர்களும் ரோந்து வண்டிகளும் நிறைந்திருந்தன. அவ்வளவையும் விட்டுவிட்டு இந்த ஓட்டுனருக்கு மட்டும் ஏன் அடி உதை என நீதிபதி சிந்தித்தாரா? அந்த ஓட்டுனர் எத்தனையோ பேர்களின் உயிர்களை பலிவாங்கியிருப்பான்., என்பது தெரியுமா அவருக்கு? அந்த ஓட்டுனர் மலாய்க்காரன் அல்லாமல் வேறு இனத்தவனாக இருந்திருப்பானேயானால், அவன் பிணம்தான். [நான் நேரில் கண்டது]
இனி அரசாங்க எதிர்ப்புக்கள் இந்த கதி தான்— அம்னோ கைகூலிகள் நீதிபதிகளாக இருப்பதினால் இந் நிலை. நீதி நியாயம் எதையும் எதிர்பார்க்கமுடியாது. தேர்தல் முடிந்ததும் இனி அவன்களை அசைக்க முடியாது.
போலிஸ் காரர்கள் பொது மக்களை ரோட்டில் போட்டு அடித்தார்கள்
அவர்களை எப்போது கைது செய்வார்கள் .BN அரசாங்கமே ஒரு
குண்டர் கும்பல் தான்..இவர்களின் ஆட்சி ஒரு துப்பு கெட்ட ஆட்சி .
நடந்தது என்னவென்று தெரியாமல் நீதிபதி தீர்ப்பை வழங்கி விட்டார் .அனால்,அங்கு என்ன நடந்தது என்று ஒரு சிலருக்குத்தான் தெரியும் .சரி விடுங்கள் வரும் bersih 4.0 என்னதான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்போம் .பாரிசன் அரசாங்கம் ஒழிக !!!!!!!!!!!!!!11